Home சமையல் குறிப்புகள் good Food கோழிக்கறி பக்கோடா!

good Food கோழிக்கறி பக்கோடா!

28

கோழிக்கறி பக்கோடா எப்படி செய்வது எனப் செய்முறையில் படித்து வீட்டில் செய்து குடும்பத்தினருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

தேவையானவை

கோ‌ழி‌க்க‌றி – கா‌ல் ‌‌கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மசாலா தூ‌ள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூ‌ள் – 1 டீஸ்பூன்
‌மிளகு தூ‌ள் – 1 டீஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் – 1 டீஸ்பூன்
‌வி‌னிக‌ர் – 1 டீஸ்பூன்
உ‌ப்பு – 1 டீஸ்பூன்
எ‌ண்ணெ‌ய் – 4 க‌ப்

செய்முறை

கோ‌ழி‌க்‌க‌றியை தேவையான அள‌வி‌ற்கு சதுர‌த் து‌ண்டுகளாக வெ‌ட்டி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து‌க் கழு‌வி ‌நீரை வடி‌த்து வை‌க்கவு‌ம்.

கோழிக்கறி துண்டுகள், இஞ்சி,பூண்டு விழுது, மசாலா தூள், மிளகாய்த்தூள், மிளகு தூள், மஞ்சள்தூள், வினிகர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியுள்ள கோ‌ழி‌க்க‌றியை கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நன்கு பொரித்து எடுக்கவும்.

சுவையான கோ‌ழி‌க்க‌றி பக்கோடா தயா‌ர்.