சூடான செய்திகள்:மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவுகள் மிகவும் இன்றியமையாதது. உணவுகள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. உணவுகள் மூலம் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும். இத்தகைய உணவுகள் துணையுடன் படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்கத் தேவையான ஆற்றலை அளிக்கும். தம்பதிகள் சந்தோஷமாகவும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டுமானால், அவர்களது தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் பல தம்பதிகள் விவாகரத்து பெறுவதற்கு ஒரு காரணமாக தாம்பத்ய வாழ்க்கை எதிர்பார்த்த வகையில் இல்லாதது உள்ளது. தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இல்லாமல் இருப்பதற்கு தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைக் கூட கூறலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து, நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், பாலியல் உணர்ச்சிகள் சரியான நேரத்தில் தூண்டப்பட்டு, தம்பதியர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜங்க் உணவுகளை உட்கொண்டு, மன அழுத்தத்துடனேயே வாழ்க்கையை நடத்தினால், படுக்கையில் துணையை திருப்திப்படுத்த முடியாமல், இருவருக்கிடையே சண்டைகளும், மனக் கசப்புக்களும் தான் அதிகரிக்கும். ஆகவே நீங்கள் உங்களது தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும் சில உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்து, பாலுணர்ச்சியும் சரியாக தூண்டப்படும். சரி, இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போம் வாருங்கள்.
சோயா சோயா பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அற்புதமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. பெண்கள் சோயாவை சாப்பிட்டால், அது யோனியில் திரவப் பொருளின் உற்பத்திக்கு உதவி, உறவின் போது யோனி விரைவில் வறண்டு போகாமல் தடுக்கும். ஆண்கள் சோயாவை உட்கொண்டால், விறை வீக்கம் ஏற்படும் அபாயம் தடுக்கப்படும்.
ஓட்ஸ் ஓட்ஸ் பாலுணர்ச்சி தூண்டுதலை மேம்படுத்துவதற்கு தேவையான L-அர்ஜினைனை வழங்கும். அதோடு, இந்த L-அர்ஜினைடன ஓட்ஸில் மட்டுமின்றி, நட்ஸ், விதைகள், பால் பொருட்கள் மற்றும் கடல் உணவுகளிலும் அதிகம் உள்ளது.
மீன் மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், செக்ஸ் ஹார்மோன்களின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும். கானாங்கெளுத்தி, சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளுடன், ஆளி விதை, நட்ஸ், ஆலிவ் ஆயில், சோயாபீன் ஆயில் போன்றவற்றிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.
கடல் சிப்பி கடல் சிப்பியை உட்கொண்டால், உடலில் பாலுணர்ச்சி பெருக்கெடுத்து ஓடும். இதில் உள்ள அதிகளவிலான ஜிங்க் சத்து, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கும், படுக்கையில் சிறப்பாக செயல்படவும் அவசியமானதாகும். மேலும் இது ஒருவரது உடலின் ஆற்றல் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கும்.
பூண்டு பூண்டில் உள்ள அல்லிசின், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் பூண்டில் உள்ள மாங்கனீசு, கால்சியம், காப்பர், பாஸ்பரஸ், செலினியம், வைட்டமின் பி1, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் பல வாழ்க்கை வழிமுறைகளுக்கு உதவும்.
அவகேடோ அவகேடோ என்னும் வெண்ணெய் பழம், உடலில் செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. அதே சமயம் அவகேடோ பழத்தில் வைட்டமின் ஈ ஏராளமான அளவில் உள்ளது. இந்த வைட்டமின் ஈ, இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைக்கவும், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தூண்டவும் உதவுகிறது. மேலும் வைட்டமின் ஈ நிறைந்த டயட்டை மேற்கொண்டால், ஆண்களின் விந்து தரம் மற்றும் இயக்கம் மேம்படும்
நட்ஸ் மற்றும் விதைகள் நட்ஸ் மற்றும் விதைகளில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை மேம்படுத்த தேவையான ஜிங்க் சத்து வளமான அளவில் உள்ளது. மேலும் இது ஒட்டுமொத்த உடலிலும் இரத்த ஓட்டம் சிறப்பாக பாய்ந்தோட செய்யும். குறிப்பாக நட்ஸ் மற்றும் விதைகளை சாப்பிட்டால், அந்தரங்க உறுப்பில் இரத்த ஓட்டம் எப்போதும் சிறப்பாக இருக்கும்.