Home பாலியல் செக்ஸ் என்னெல்லாம் கொடுக்குது தெரியுமா…?

செக்ஸ் என்னெல்லாம் கொடுக்குது தெரியுமா…?

50

செக்ஸ் குறித்து வயது வந்த அனைவருக்குமே நன்றாகவே தெரிந்திருக்கும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று இங்கு யாரும் இல்லை. இருந்தாலும் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பார்கள் அனைவருமே.

செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் ஒருவரிடமிருந்து பெறுகிறார்கள். தாய் தந்தையிடமிருந்து சிலருக்கு இதுகுறித்துத் தெரிய வரும்.
ஆசிரியர்களிடமிருந்து சிலருக்குத் தெரிய வரும். நண்பர்கள் மூலம் தெரிய வரும். சிலருக்கு புத்தகங்கள், இன்டர்நெட் மூலம் தெரிய வந்திருக்கும்.

செக்ஸ் உறவின் மூலம் நமக்கு உடல் ரீதியான இன்பம் மட்டுமே கிடைக்கிறது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மறைமுகமாக பல நல்ல விஷயங்களையும்,அது நமது உடலுக்கும், மனதுக்கும் கொடுக்கிறது. அது குறித்த ஒரு ரவுண்டப்தான் இது…

பதட்டத்தைக் குறைக்கிறது செக்ஸ்

செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏகப்பட்ட நல்லது நடக்கிறதாம். மன அழுத்தம், பதட்டம், மனச் சோர்வு ஆகியவை நீங்குகிறதாம். இதை ஆதாரப் பூர்வமாக, அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

செக்ஸ் உறவில் சிறப்பாக ஈடுபட்டு வருவோர், அதில் குறைபாடு உள்ளவர்களை விட மிகவும் ஆரோக்கியமாகவும், ஆக்டிவாகவும் இருப்பார்களாம். அவர்களிடம் குழப்பம், மனச்சோர்வு, மன அழுத்தம், சோம்பேறித்தனம் ஆகியவை இருக்காதாம். எதையும் சுறுசுறுப்பாக தெளிவாக செய்வார்களாம்.

செக்ஸ் உறவின் மூலம் ஆண்களும் சரி பெண்களும் சரி நல்ல நிம்மதியான மன நிலையைப் பெற முடிகிறதாம். அதிக அளவில் உடலுறவு வைத்துக் கொள்வோருக்கு ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்குமாம். இதனால் அவர்கள் சுறுசுறுப்பாக வேலையைச் செய்ய முடிகிறதாம். எவ்வளவு கடினமான வேலையைக் கொடுத்தாலும் கடகடவென முடித்துத் தள்ளி விடுவார்களாம்.

செக்ஸ் மகிழ்ச்சி தருகிறது

செக்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டதுமே பலருக்கும் மனதுக்குள் பல லட்சம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற பரவச உணர்வு ஏற்படும். அதுதான் செக்ஸ் குறித்த நினைவால் ஏற்படும் மகிழ்ச்சி உணர்வாகும்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், செக்ஸ் தங்களுக்கு பெரும் மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தருவதாக பலரும் தெரிவித்திருந்தனர். செக்ஸ் குறித்த நினைவே தங்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தருவதாகவும், இன்று இரவு விருந்து உண்டு என்பது உறுதியாகும்போது அளவு கடந்த மகிழ்ச்சியுடன் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உடல் ரீதியான பிணைப்பு, உள்ளத்தையும் சேர்த்து மகிழ்ச்சிப்படுத்துவதே இதற்குக் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மேலும், வாரம் 3 முறைக்கு மேல் உறவு வைத்துக் கொள்வோருக்கு மன மகிழ்ச்சி அளவுக்கதிகமாக இருக்குமாம்.

நோய்களை விரட்டும் செக்ஸ்…

செக்ஸ் ஒரு மருந்தாகவும் செயல்படுகிறது. தொடர்ச்சியாக செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கு சளி, காய்ச்சல் போன்றவை அண்டவே அண்டாதாம். செக்ஸ் உறவில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்போது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி ஆரோக்கியமாக திகழ முடியுமாம்.

வாரம் 2 முறை உறவு வைத்துக் கொள்வோரின் உடலில் இம்யூனோகுளோபுலின் ஏ அல்லது ஐஜிஏ என்ற நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக சுரக்கிறதாம். இந்த ஐஜிஏ, நமது எச்சிலில் அதிக அளவு இருக்கிறது. எச்சில் மூலமாகத்தான் பல நோய்களும் பரவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே செக்ஸை தொடர்ந்து கடைப்பிடித்து வருவோருக்கு எச்சிலில் ஐஜிஏ சுரப்பு அதிகமாகிறதாம். இதனால் பல நோய்கள் நமது உடலுக்குள் ஊடுறுவ முடியாமல் திரும்பிப் போய் விடுகின்றனவாம்.

செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி

செக்ஸ் உறவைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும்போது உடல் வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளும் ஓடிப் போகின்றனவாம். ஒரு நல்ல வலி நிவாரணியாக செக்ஸ் திகழ்கிறதாம்.

பெண்களுக்கு ஆர்கசம் ஏற்படும்போது அது இன்பத்தை மட்டும் வாரி வழங்குவதில்லை, மாறாக உடலுக்கு நல்ல ரிலாக்சேஷனையும் சேர்த்தேத் தருகிறதாம். எப்படிப்பட்ட உடல் வலி, அசதியாக இருந்தாலும், நல்லதொரு செக்ஸ் உறவை வைத்துக் கொண்டால் அது ஓடிப் போய் விடுமாம்.

மேலும் செக்ஸ் உணர்வுகள் பெருக்கெடுக்கும்போது உடலில் உள்ள அசதி முழுமையாக நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கிறதாம். பெண்களின் அந்தரங்க உறுப்பில் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படும்போது, அவர்களுக்கு உடலெல்லாம் மசாஜ் செய்து விட்டதைப் போல ஒரு புத்துணர்ச்சி உருவாகிறதாம்.