Home பாலியல் பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை

பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை

42

ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண் ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இதழ்கள் மற்றும் யோனி மலர் எனப்படும் கிளிட்டோரிஸ், வெஸ் டிபியூல் போன்ற பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை.

இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண்டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ் கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு சதை க் கதவாக இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறு ம் சதைக்கதவு மட்டுமல்ல. ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இவற்றி ல் பின்னிப் பிணைந் துள்ளன். ஒரு பெண் ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இத ழ்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரி த்தால், அதற்குள் இருப்பதுதான் வெஸ்டி பியூல். இது பிறப்புறுப்பின் உள்பகுதி. இதில்சிறு நீர் துவாரம் மற்றும் பெண் குறி யின் உள்பாதை இரண்டும் இருக்கும்.

பெண்ணின் ஜனன உறுப்பில் கண் ணுக்குத் தெரியாமல் உள்ளே இருக் கும் பகுதிகளில் பெண்குறி உள் பாதை, கர்ப்பப்பையின் வாசல், கர்ப் பப்பை , பெலோபியன் டியூப், கரு முட்டை பை ஆகியவை அடங்கும்.

பெண்பிறப்புறுப்பின் உள்பாதை, கண்ணுக்குத் தெரியும் வெஸ்டி பியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்ப ப்பை வாசல் வரை அமைந்திருக்கும். உள் பாதையில் ஒரு அங்குல தூரத்தில் அமைந்திருப்பது கன்னித்திரை. [பெண் பிறப்புறுப்பின் உள்பாதை, பெண்ணுக்குப் பெண் வித்தியாசப் படும். சராசரியாக சாதாரண நி லையில் பெண்குறியின் உள் பாதையின் நீளம் மூன்றிலிருந்து ஐந்து அங்குலம் வரை இருக்கும். ஆனால், இந்த உள்பாதை தேவை க்கேற்ப நீளும் தன்மை கொண் டது. சில பெண்கள், ஆண் அளவு டன் ஒப்பிட்டுக் கவலை கொள் வார்கள். இந்தக் கவலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்கள் திருமணத்துக்குப் பின்னர் வெ ஜினிஸ்மஸ் என்கிற செக்ஸ் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். இது போன் ற உணர்வில் உள்ள பெண்களுக்கு, பிறப்புறுப்பு இறுக்கமாகி பிரச்னை வரும். ஆனால், இது தேவை இல்லாத கவலை. பத்தாவது மாதம் ஒரு குழந்தையே இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது என்பதை பலரும் அறிவதி ல்லை. ]

அடுத்துக் கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ் எனும் சளிபோன்ற திரவம் உற்பத்தி யாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தியான சளிப்படலமாக அமைந்திருக்கும். கருமுட்டை வெளிவரும் நாளில், இந்த சளிப்படலம் கரை ந்து, பிறப்புறுப்பு பாதை வழியாக வெளிவந்து விடும்.

[கருமுட்டை வரும் நாளில் மியூக்கஸ் சளிப்படலம் மெலிதாகிக் கரந்து வரும் விஞ்ஞான உண்மையை வெள்ளைப்படுதல் என்று சில பெண் கள் தவறாக புரிந்துகொள்கின்றனர். ]

கண்ணுக்குத் தெரியாமல் பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை:

கர்ப்பப்பை, கருமுட்டைப் பை, கருமுட்டை. கர்ப்பப் பைக்கு ஆங்கிலத் தில் யூட்ரஸ் (UTERUS) என்று பெயர். கர்ப்பப் பையின் பரப்பளவு, நம் ஒரு கையை இறு க்கி மூடும்போது கிடைக்கும் பரப் பளவு போன்றது தான். முக்கோ ண வடிவில் இருக்கும் கர்ப்பப் பை, சாதாரண நிலையில் 3 முத ல் 4 அங்குல நீளமும், 2 அங்குல அகலமும் உடை யது. அதே சமயம், கருவுற்ற காலத்தில் இதன் நீளம் 12 முதல் 13 அங் குலமாகவும், அகலம் 8 முதல் 10 அங்குலமாகவும் விரி வடையும். முக்கோண வடிவத்தி ன் கூர்பகுதியில் கர்ப்பப் பையின் வாசல் இருக்கும். கர்ப்பப்பையி ன் சுவர்கள் அடர்த்தியாகவும் நீளு ம் தன்மை உடைய தாகவும் இரு க்கும். குழந்தை பிறந்தபிறகு மீ ண்டும் அது இயல்பான நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு நீட்சித்தன் மையுடன் உள்ள து.

கர்ப்பப் பையின் சுவர்கள் மூன்று அடுக்கு களைக் கொண்டிருக்கும். உள் ளே இருக்கும் அடுக்குக்கு எண்டோமெட்ரியம் என்று பெயர். கரு உரு வானதும் அது வளர்வதற்கு ஏதுவாக சற்று பருத்து, ஒரு குஷன் போல் பயன் தரும் இந்த அடுக்கு. ஒருவேளை கரு தரிக்க வில்லை என்றா ல் இறந்த கருமுட்டை, உப்பலான எண்டோமெ ட்ரியத்தின் துகள்கள் எல்லா ம் மாதவிடாய் சமயத்தில் ரத்தத்துடன் கலந்து வெளி யேறி விடும். ஒவ்வொரு மாதமும் எண்டோமெட்ரியம் உப்பலாகும். கரு உருவாகவில்லை என்றால், கழிவுகள் மாதவிடாயின்போது வெளிவந்துவிடும். இது ஒரு சுழற் சியாகவே நிகழும். பெண் பருவம டைந்திருந்த நாளிலிருந்து மெனோ பாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற் கும் வயது) வரை இது நடக்கும்.

அடுத்து, பெலோப்பியன் டியூப். இது கர்ப்பப் பையின் மேல்புறம், இட து மற்றும் வலது பக்கத்தில் இரு குழாய்களாக இருக்கும். ஒவ்வொரு ஃபெலோப்பியன் குழாயும் 4 அங்குல நீளம், 2 மில்லிமீட்டர் குறுக் களவு கொண்டது. இதனுள்ளே சிறுசிறு நூல் மாதிரி சீலியா என்பது அமைந் திருக்கும். கருமுட்டையைக் கொஞ்சம் கொஞ் சமாக நகர்த்திக் கர்ப்பப் பைக்குக் கொண்டு வருதற்காக இந்த சீலியாக்கள் மர வட்டையின் கால் களைப் போல் அசைந்து கொண்டேயி ருக்கும்.
[பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஆபரே ஷன் செய்யப்படும் போது இந்த ஃபெலோப்பி யன் டியூப்பைதான் வெட்டித்தைப்பார்கள்]