பெண்கள் உடல் கட்டுப்பாடு:பெண்கள் பிரா அணியாததால், தங்களின் மார்பகங்கள் தொய்வடைவதாக தவறாக எண்ணிக்கொள்வதாக மருத்துவர்கள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வில் அவர்கள் தெரிவித்த கருத்துகள்.
கலிபோர்னியாவின் பெண்கள் ஆரோக்கிய நிபுணரான பேட்ரிக்கா கிராகத்தி, ‘பிரா அணியாமல் இருப்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை,’ என தெரிவித்துள்ளார்.
போதிய ஆய்வுகள் இல்லை
கலிபோர்னியாவின் பெண்கள் ஆரோக்கிய நிபுணரான பேட்ரிக்கா கிராகத்தி, ‘பிரா அணியாமல் இருப்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை,’ என தெரிவித்துள்ளார்.
15 ஆண்டு ஆய்வு
சுமார் 15 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் பிரா அணிவதால் பெண்களுக்கு கூடுதல் பலன் எதுவும் இல்லை என்றும், மாறாக பாதிப்பே அதிகம் என தெரியவந்துள்ளது.
பிரா அணியவில்லை என்றால்…
சுமார் 18 முதல் 35 வயது 300 பெண்களிடம் நடத்திய ஆய்வில், பிரா அணியாத பெண்களுக்கு மார்பகத்தை தாங்கும் இயற்கை சதைகள் வளர்ந்துள்ளது.
பிரா அணிவதால் என்ன பயன்?
ஆனால் பிரா அணியும் பெண்களுக்கு இந்த சதையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரா அணிவதை நிறுத்தலாமா
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரா அணியும் பெண்கள், பிரா அணியாமல் கிடைக்கும் நல்ல பலன்கள் தற்போது நிறுத்துவதால் பெற முடியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மார்பக தொய்வு காரணம் என்ன?
பெண்களின் மார்பகங்கள் தொய்வு என்பது எத்தனை முறை அவர்கள் கர்ப்பமாகிறார்கள் என்பதை பொறுத்தே உள்ளதே தவிர, பிரா அணியாமல் இருப்பதால் அல்ல என கிராகத்தி தெரிவித்துள்ளார்.