தாய் நலம்:பெண்கள் கருத்தரிப்பது என்பது அவர்கள் வாழ்வில் ஏற்படக் கூடிய மிக உன்னதமான விடயமாகும். இந்த உன்னதமான விடயத்தை பலர் பல்வேறு விதமாக கொண்டாடுவர்.
இவ்வாறிருக்க, பொதுவாக இந்துப் பெண் ஒருத்தி திருமணமானவுடன் அவளது கால்களில் மெட்டி அணியும் வழக்கம் ஒன்று இருந்து வருகின்றது. இதற்கு விஞ்ஞான ரீதியிலும் விளக்கம் உள்ளது. குறித்த பெண் கருவுற்றதும் அவளது கால் விரல்களில் அணிந்துள்ள மெட்டி மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பதை எம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவை என்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
01. கால் விரலில் மெட்டி அணிவதன் மூலம் கர்ப்பகாலத்தில் பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் என்பன கட்டுப்படுத்தப்படும். இந்த மெட்டியை தொடர்ச்சியாக அணிவதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் கருத்தரிப்பது இலகுவாக்கப்பட்டு ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புக்கள் உருவாகின்றது.
02. பெண்ணின் கருப்பை மற்றும் கால் விரல் என்பன ஒரு நரம்பால் இணைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் காலில் மெட்டி அணிவதன் மூலம் பிறக்கவிருக்கும் குழந்தையுடன் முன்கூட்டிய தொடர்பு ஏற்படுத்தப்படுகின்றது. அத்துடன் குறித்த குழந்தை பிறந்ததும் தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள உறவு மேம்படுத்தப்படுகின்றது.
03. கருப்பைக்கும் கால் விரல்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளமையால் கால் விரல்களில் மெட்டி அணிவதன் மூலம் அழுத்தம் ஏற்படுத்தப்படுகின்றது. குறித்த அழுத்தம் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி புரிகின்றது.
04. பொதுவாக பெண்கள் அணியும் மெட்டியானது வெள்ளியோ மற்றும் ஏனைய உலோகங்களால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த உலோகங்கள் ஊடுகடத்துவதில் சிறந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். அந்த வகையில் குறித்த தாய் மெட்டி அணிந்து நடந்து செல்லும் போது நிலத்தில் உள்ள நேர்மறை சக்திகள் உறிஞ்சப்பட்டுதாயின் உடலினுள் ஊடுகடத்தப்படுகின்றது. இதன் மூலம் குறித்த சக்திகள் அனைத்தும் குழந்தையின் உடலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றது.
05. கர்ப்பகாலத்தில் தாயின் மனநிலை சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். மெட்டியை அணிவதன் மூலம் தாயின் மனநிலை நல்ல முறையில் இருப்பதுடன் குழந்தையும் நல்ல முறையில் இருப்பதற்கு வழிவகுக்கப்படுகின்றது.
06. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதன் மூலம், உடலினுள் ஈர்க்கப்படும் சக்தி சமநிலை படுத்தப்படுவதோடு இதன் மூலம், கருப்பையில் உள்ள குழந்தை சௌகரியமாக இருப்பது இலகுபடுத்தப்படுகின்றது.