‘இதெல்லாம் நம்புறா மாதிரியாங்க இருக்கு’ – தலைப்பை படித்த ‘சிங்கிள் ஆண்களின்’ மைண்ட் வாய்ஸ் இதுவாகத் தான் இருக்கும். நம்புங்க பாஸ்.. ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது.
ஆண், பெண் இருவருக்கும் இந்த விடயத்தைப் பொருகூழ் த்த வரை சிறிய வேறுபாடு மட்டுமே இருக்கிறது. ஆண்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் செய்வர், பெண்கள் ரகசியமாகச் செய்வர். அதாவது ஆண் ஒரு பெண்ணைப் பார்த்தால் அது பலருக்கும் உடனடியாகத் தெரிந்து விடும். இதுவே பெண்கள் பல நாட்கள் பார்த்தாலும் அது யாருக்கும் தெரியாது..!
சைட் அடிப்பதில் இருந்து ஃப்ளிர்டிங் வரை ஆண்களை விடப் பெண்கள் சிறந்தவர்கள் என்பதே உண்மை.
பெண்களின் கண்கள் மிகவும் கவர்ச்சியானவை. அதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்தும் பாவனையும், பேசும் பாஷையும் ஆண்களால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. ஒரு ஆணைக் கவர வேண்டும் என்றால் பெண்கள் செய்யும் முதல் ட்ரிக் கண்களால் பேசுவது தான்.
பெண்களின் அடுத்த ட்ரிக்ஸ், கேள்விகள் கேட்பது. காரணமே இன்றி ஏதேதோ கேள்விகள் கேட்டுப் பேச்சை துவங்குவார்கள். இந்த வழி எங்கே போகிறது, எப்படிச் செல்ல வேண்டும்?, உனக்கு இதெல்லாம் தெரியுமா? எப்படித் தெரியும் எனக் கேள்வி கனைகள் தொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
மூன்றாவதாகப் பெண்கள் கையாளும் ட்ரிக் பாராட்டுவது. நீ நடந்தால் நடை அழகு, நீ பேசும் மொழில் அழகு என நீங்கள் செய்யும் அனைத்தையும் பாராட்டிக் கொண்டே இருப்பார்கள். இதை வைத்து அந்தப் பெண் உங்களை ஈர்க்க முயல்கிறார் என்பதை 90% நீங்கள் ஊர்ஜிதம் செய்து விடலாம்.
தலையோடு தலை தவறுதலாக முட்டுவது, மேலே விழுவது, பேசும் போது தொடுவது என ஏதாவது ஒன்றை தெரியாமல் செய்வதைப் போலத் தெரிந்தே செய்வார்கள்.