பிரா போடுவது நல்லதா, பிரா போடாமல் இருப்பது நல்லதா? இந்த கேள்வி பல பெண்களுக்கு எழும். இதற்கு மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்.
பிரா உடலுக்கு நல்லது தானா என்று கேட்கும் இந்த நேரத்தில், இது தொடர்பாக இதுவரை பெரிதாக எந்த ஆராய்ச்சியும் நடக்கவில்லை.
ஆனால் பிரா அணிவது நிச்சயம் உங்கள் உடல் நலத்ததில் எந்த முன்னேறத்தையும் தராது என கலிபோர்னியானாவின் செவிலியர் பயிற்சியரான ஃப்ராட்ரிகா க்ராக்டிக் தெரிவித்துள்ளார்.
இவர் பெண்கள் நலத்தில் சிறப்பு மருத்துவர் ஆவார். ஃப்ராட்ரிகா க்ராக்டிக் உடல் நலம் தொடர்பான வலைதளத்தில், ப்ரா அணியாமல் இருப்பதால் உடலுக்கு தீங்கு என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜுன் டெனிஸ் ரௌலியன் என்பவர் நடத்திய 15 வருட ஆராய்ச்சியில், பிராவால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும், அவற்றால் உடலுக்கு தீமை தான் வந்தது என்றும் தெரியவந்துள்ளது.
பிரா அணியதா 18 வயது முதல் 35 வரை உள்ள 300 பெண்களிடம் ரௌலியன் நடத்திய ஆராய்ச்சியில் பிரா அணியாமல் இருந்தால் இயற்கையாகவே மார்பக தசை திசுக்கள் வளரும் நிலை ஏற்படுகிறது.
அதேநேரம் கடினமான பிரா அணிபவர்களிடம் நடந்த ஆராய்ச்சியில் இயற்கையாகவே மார்பக தசை திசுக்கள் வளரும் நிலை தடுக்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு சீக்கிரமே மார்புகள் தொங்கிப் போகக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறதாம்.
இருப்பினும் ஒரேயடியாக பிராவை நிராகரித்து விட முடியாது என்றும், அவை பெண்களுக்கு உகந்ததல்ல என்று கூறி விட முடியாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.