Home பெண்கள் பெண்குறி பெண்களின் பெண்ணுறுப்பைக் காயப்படுத்தக்கூடிய மோசமான விஷயங்கள்!!!

பெண்களின் பெண்ணுறுப்பைக் காயப்படுத்தக்கூடிய மோசமான விஷயங்கள்!!!

425

பெண்கள் பாலியல்:பெண்ணுக்கு பெண்ணுறுப்பு என்பது உடலில் உள்ள மிக விலைமதிப்பற்ற அங்கமாக விளங்குகிறது. அதனை மென்மையாக பராமரித்து, அன்பாக பார்த்துக் கொள்வதே ஒரு பெண்ணின் மனதில் முதல் விஷயமாக இருக்க வேண்டும். சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி, 80 சதவீத பெண்கள் அன்றாட அடிப்படையில் சுய இன்பம் காண்கின்றனர்.

புணர்ச்சி பரவச நிலைக்கு இது ஆரோக்கியமானது தான் என்றாலும் கூட, பெண்ணுறுப்பு பாதிப்படையாமல் இருக்க சில சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதும் கூட ஆரோக்கியமானதே. இந்த பகுதியில் கற்பனை செய்து பார்க்க முடியாத பொருட்களை திணிக்கும் போக்கை பெண்கள் கொண்டிருப்பார்கள். இதனால் பின்னர் தொற்றுக்களும் சில வகை வியாதிகளும் ஏற்படக்கூடும்.

மற்றொரு புறம், வாசனை சோப்புகள் மற்றும் எண்ணெய் சேர்த்துள்ள மசகுப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிட்டால், பெண்ணுறுப்புக்கு மேலும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறையும். பெண்ணுறுப்புக்கு செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி இன்று போல்ட் ஸ்கை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறது. இவ்வகையான ஆரோக்கியமற்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, அவற்றில் இருந்து எப்போதும் விலகியே இருங்கள்.

அந்த இடத்தில் துளையிடுதல்

உங்கள் பெண்ணுறுப்பை மிகவும் காயப்படுத்தும் வகையில் நீங்கள் செய்யக்கூடிய மோசமான விஷயம், பிறப்புறுப்பில் துளையிடுவது. உடலுறவின் போது இது வலியை ஏற்படுத்துவதோடு, மிக தீவிர தொற்றையும் உண்டாக்கும். இது ஒருவரின் உயிருக்கே ஆபாத்தாய் போய் முடியும்.

மசகுப்பொருட்கள் உண்டாக்கும் கேடு

எண்ணெய் சம்பந்தப்பட்ட மசகுப்பொருட்கள் (Lubricants) கெட்டியாக இருக்கும். அதனால் அதை கழுவுவதும் கஷ்டமாக இருக்கும். இதனால் உங்கள் பெண்ணுறுப்பில் தீய பாக்டீரியா குடியிருக்க தொடங்கிவிடும். உடலுறவு கொள்வதில் பிரச்சனை இருந்தால், எண்ணெயற்ற மசகுப்பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

க்ரீம்கள்

வெளிப்படையாக தெரியக்கூடிய முடியை நீக்குவது நல்லது தான். ஆனால் அதற்கு அகற்றக்கூடிய க்ரீம்கள் பயன்படுத்துவது ஆரோக்கியமற்றது. இந்த க்ரீம்களில் உள்ள ரசாயனங்கள் உணர்ச்சிமிக்க பகுதியில் புண்களை ஏற்படுத்தும். இதனால் தொற்றுக்கள் உண்டாகும்.

றிட்டு வெளிவரும் நீரால் கழுவுவது

பீறிட்டு வெளிவரும் நீரால் கழுவுதல் என்பது உங்கள் பெண்ணுறுப்பைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். முக்கியமாக இப்பகுதியை இது வறட்சியாக்கும். அதனால் எரிச்சலும் தொற்றும் உண்டாகும்.

அளவுக்கு அதிகமான சோப்பு

வாசனை சோப்பு பயன்படுத்தினால் இப்பகுதிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இதனுடன், பெண்ணுறுப்பை சோப்பை கொண்டு அளவுக்கு அதிகமாக கழுவுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது இப்பகுதியை வறட்சியாக்கும். இதனால் எரிச்சல் ஏற்படும்.

அழகுநய டாட்டூ குத்துதல்

உடல் ஓவியம் என்பது ஒருவித அழகு நயமாகும். ஆனால் அது பெண்ணுறுப்புக்கு அருகில் இல்லாதவரை. பெண்ணுறுப்பு மிக மெல்லிய சருமத்தை கொண்டுள்ளதால், இது பெண்ணுறுப்பை சிவக்க வைத்து அழற்சியை ஏற்படுத்தும். அதனால் பெண்ணுறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

உடலை இறுக்கும் ஜீன்ஸ்

பெண்ணுறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களில் உடலை இறுக்கும் ஜீன்ஸ் பேண்ட்டும் ஒன்றாகும். அதன் துணி வகையாலும், காற்று புகாததாலும் இந்த பகுதியில் பாக்டீரியாவின் வளர்ச்சி ஏற்படும். அதனால் உடலை இறுக்கும் ஜீன்ஸ் பேண்ட்டை அடிக்கடி அணியாதீர்கள்.

அளவுக்கு அதிகமாக வண்டி ஓட்டுதல்

பைக், சைக்கிள் என இரண்டையும் ஓட்டுவதால் உங்கள் பெண்ணுறுப்புக்கு பாதிப்பு ஏற்படும். சைக்கிள் ஓட்டும் போது நீங்கள் அமரும் இருக்கை வசதியாக உள்ளதா என்பதை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். அது தானே விலைமதிப்புமிக்க அந்த பகுதியை காக்க போகிறது.

குளியல் தொட்டி

குளியல் தொட்டியில் ஓய்வு எடுப்பது பெண்ணுறுப்புக்கு மிகவும் தீமையானது. குளியல் தொட்டியின் தண்ணீர் பாக்டீரியாவை உருவாக்கி, பெண்ணுறுப்பில் தொற்றை ஏற்படுத்தும். அதனால் நீண்ட நேரத்திற்கு குளியல் தொட்டியில் ஓய்வெடுப்பதை தவிர்க்கவும்.

ம்ம்ம்ம்ம்ம்…. நீங்கள் சுய இன்பம் காண்கையில்!

எப்போதாவது சுய காண்பது நல்லது தான். ஆனால் அதனை பழக்கமாக்கி கொண்டால், நாளடைவில் அது தொற்றுக்களையே உண்டாக்கும்.