Home பெண்கள் தாய்மை நலம் பெண்கள் கருத்தரிக்க சரியான நேரம் இதுதான் டாக்டர் சொல்கிறார்

பெண்கள் கருத்தரிக்க சரியான நேரம் இதுதான் டாக்டர் சொல்கிறார்

233

தாய் நலம்:பெரும்பாலான தம்பதியருக்கு வாழ்க்கை கனவாக இருப்பது ஒரு குழந்தைக்கு பெற்றோராக வேண்டும் என்பது தான்; தம்பதியர்கள் சரியான முறையில், மிகச்சரியான நேரத்தில், உள்ளம் நிறைந்த காதலுடன் உடலால் ஒன்று இணைந்தால் மட்டுமே விரைவில் கருத்தரிப்பு நிகழும்.
கருத்தரிப்பு நிகழ உடலால் இணைந்து கொண்டே இருக்க வேண்டுமா, எப்படி கலவியில் ஈடுபட வேண்டும், எத்தனை முறை கலவி மேற்கொள்ள வேண்டும் என்று பல சந்தேகங்கள் தம்பதியர் மனதில் உள்ளன.

அந்த சந்தேகங்களை தீர்க்க உதவும் தகவல்கள் மற்றும் வேகமாக கருத்தரிக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை கலவி கொள்ள வேண்டும் என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
கருத்தரிப்பு நிகழ?
கருத்தரிப்பு நிகழ ஆணும் பெண்ணும் உடலால், மனதில் கொண்ட காதலால் இணைய வேண்டியது மிகவும் அவசியம். காதல் கொண்டு இருப்பது மற்றும் உடலால் இணைவது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஆண் மற்றும் பெண்ணின் உடல் ஆரோக்கியம் கொண்டதாகவும், கருத்தரிப்புக்கு காரணமாக உள்ளே இருக்கும் உள்ளுறுப்புகளும் அணுக்களும் கூட கட்டாயம் ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
சராசரியாக எத்தனை முறை?

திருமணம் ஆன பின் குறைந்தது 78 முறைகள் ஆவது, சரியான முறையில், சிறப்பாக கலவி கொண்டால் தான் குழந்தை கருத்தரிப்பு நிகழும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆகையால், திருமணம் முடிந்து கருத்தரிப்பு ஏற்பட குறைந்தது இரண்டரை அல்லது மூன்று மாதங்கள் ஆவது காத்திருக்க வேண்டும்.
விரைவில் ஆக வேண்டும்?

விரைவில் பெற்றோராக வேண்டும் என்று ஆசைப்படும் தம்பதியர் தினந்தோறும் உச்ச கட்ட இன்பம் அனுபவிக்கும் வகையில் உறவு கொண்டால் மட்டுமே இது சாத்தியப்படும். அதிலும் இவ்வாறு ஆசை கொள்ளும் தம்பதியர் தகுந்த ஆரோக்கியம் கொண்ட உயிரணுக்களையும், உடல் வலிமையையும், திண்மையையும் கொண்டு இருக்க வேண்டியது அவசியம். மேலும் படிக்க: ஆண்களே, நீங்கள் என்றும் 16 போல் இருக்க இவற்றை செய்தாலே போதும்..!

போர் அடிக்காதா?
தினமும் இப்படி உறவில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தால் போர் அடித்து விடாதா என்றால், கண்டிப்பாக போர் அடிக்க வாய்ப்பு உண்டு. அதனால், நீங்கள் மேற்கொள்ளும் கட்டில் விளையாட்டை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, பல வித்தைகள் மற்றும் விளையாட்டுகள் கூடியதாக மேற்கொண்டால், நன்கு விறுவிறுப்பாக இருக்கும்.

மாதவிடாய் தடையா?
எல்லா நாட்களும் தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் அன்பை, காதலை வெளிப்படுத்தி கொண்டு வாழ்ந்தால், வாழ்க்கை இன்ப மயமாக சந்தோசம் நிறைந்ததாக இருக்கும். மேலும் மாதவிடாய் நாட்கள் வரும் பொழுது கூட தம்பதியர் தொடுதல், ஊடல் போன்றவற்றை மேற்கொண்டு கூடலை மட்டும் தவிர்த்து இருக்கலாம்; அல்லது ஆசைப்பட்டால் கூடலையும் கூட நடத்திக் கொள்ளலாம்.

சரியான நேரம்!
கருத்தரிக்க சரியான காலம் எது என்று பார்த்து உறவில் ஈடுபட்டால், விரைவில் கருத்தரிப்பை அடைந்து விடலாம். இது ஒரு பெரிய சிதம்பர இரகசியம் எல்லாம் இல்லை; பெண்ணின் மாதவிடாய் நாட்களை கணக்கிட்டு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் தொடங்கி 9 ஆம் நாள் வரும் பொழுது ஆரம்பித்து, 28 ஆம் நாள் வரை சரியான முறையில் உறவு கொண்டால் போதும்; உடலும் ஆரோக்கியமான நிலையில் இருந்தால், உடனடியாக கர்ப்பம் ஏற்பட்டு விடும். மேலும் படிக்க: படுக்கைக்கு அருகிலேயே செல்போனை வைத்திருப்பது ஆபத்தா?

மருத்துவர் அறிவுரை!
சில சமயங்களில் கருத்தரிக்க முயற்சி மேற்கொள்ளும் பொழுது, கருத்தரிப்பு ஏற்பட்டது போல் தோன்றும் நேரங்களில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் பொழுது, மருத்துவர் கூறும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அந்த மாதிரியான சமயங்களில் மருத்துவரிடம் வெளிப்படையாக கலந்துரையாடி எப்பொழுது உறவு கொள்ளலாம்; எப்பொழுது கூடாது என்று கேட்டு அறிந்து தெளிவாக செயல்படுவது நல்லது