Home பாலியல் மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்யம்: பெண்களின் கவனத்திற்கு!

மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்யம்: பெண்களின் கவனத்திற்கு!

87

625-0-560-350-160-300-053-800-668-160-90-2பெண்களின் 40 முதல் 50 வயதில் மாதவிடாய் சுழற்சியானது நின்று விடுகிறது.

இதனால் பெண்கள் மாதவிடாய் நின்ற பின்பு உடலுறவில் ஈடுபடும் போது அதிகமான வலி ஏற்படும்.

எனவே இதை உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மாதவிடாய் நின்ற பின் தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்கள் ஒருசில விஷயங்களை நன்றாக தெரிந்துக் கொண்டு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பெண்கள் கவனிக்க வேண்டியவை

மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகு பெண்களுக்கு தாம்பத்யம் கொள்ளும் உணர்ச்சியின் அளவு குறைந்திருக்கும். எனவே அவர்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கான தூண்டுதல் குறைந்திருக்கும். இதனால் அவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபட்டாலும் முந்தைய அளவிற்கு அவர்களால் இன்பத்தை பெற முடியாது.
மாதவிடாய் முடிந்த பிறகு தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது,ஒருசில பெண்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் நின்ற பெண்கள் அதிகமாக உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் நின்ற காலத்தில் உறவு கொள்வதற்கான உணர்ச்சிகள் இருக்காது. இதனால் உறவில் ஈடுபட உணர்சிகளை தூண்டுவதற்கு எந்த வகையான மாத்திரைகளை மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் கூட, அவை பெரியதாக பயனளிக்காது.
பெண்களில் மாதவிடாய் காலம் நின்ற பிறகு தாம்பத்ய உறவில் ஈடுபடுவதால் தூக்கமின்மை, மன அழுத்தம், ஆரோக்கியப் பிரச்சனைகள், சிறுநீர் கட்டுப்படுத்துவதில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மாதவிடாய் நின்ற பின்பு தாம்பத்ய உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தால், முதலில் அவர்களுக்கு உணர்ச்சியை தூண்டும் வண்ணம் செய்த பிறகு ஈடுபட வேண்டும். இல்லையென்றால் கண்டிப்பாக அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக வலியை உணர்கின்ற சூழ்நிலைகள் ஏற்படுகிறது.
தாம்பத்ய உறவின் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடும் தம்பதிகள், முதலில் ஃபோர்ப்ளேவில் ஈடுபடுவதால் பெண்களை உணர்ச்சி ரீதியாக அதிக இன்பத்தை அடைய வைக்க முடியும் என தெரிவிக்கின்றார்கள்.
மாதவிடாய் முடிந்த பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடும் ஆண்கள், அவர்களின் துணை உடலுறவின் உணர்ச்சிகள் பற்றி எவ்வாறு உணர்கிறார்கள், என்பதை பற்றி நன்றாக தெரிந்துக் கொண்ட பிறகே அவர்கள் மேலும் உறவை தொடர வேண்டும்.
பெண்கள் தினமும் காலையில் உடற்பயிற்சிகள் செய்து வந்தால், மாதவிடாய் நின்ற பிறகு தாம்பத்ய உறவில் ஈடுபடுவது மிகவும் எளிமையாக இருக்கும். மேலும் இதனால் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை சீராக இருக்கும்.