Home ஆரோக்கியம் Girls Pass பெண்களுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட காரணங்கள் என்ன?

Girls Pass பெண்களுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட காரணங்கள் என்ன?

160

சிறுநீரக தொற்றை உண்டாக்கும் கிருமி ஈகோலை என்கின்ற பேக்டீரியா. இந்த பாதிப்பு ஆண் பெண் என இருவருக்கும் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் பெண்களுக்கே அதிகம் தாக்கப்படும் இந்த தொற்றிற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம்.

கிருமிகள் சிறுநீரக பாதையில் உருவாகி, அதனை கவனிக்காமல் அப்படியே விடும்போது, அது பலமடங்கு பெருகி, சிறுநீர் பாதையிலிருந்து பரவி சிறுநீரகப் பை மற்றும் கடைசியாக சிறு நீரகத்தை அடைகிறது.

சிறுநீர் பாதையில் உண்டாகும்போது ஆரம்ப நிலை எனலாம். அப்போது, எரிச்சல், அடிவயிறு வலி, காய்ச்சல் ஆகியவை உண்டாகும். அது தீவிரமாகும்போது சிறுநீரகத்தை அடைகிறது. இதனால் சிறுநீரகமே பாதிக்கும் நிலை உண்டாகும்.

ஆரம்ப நிலையில் அதிக நீர் குடித்தால், கிருமிகள் வெளியேறிவிடும். அதோடு மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். தீவிரமாய் இருந்தால் அதற்குரிய பரிசோதனைகளை செய்து என்னவென்று ஆராய்தல் நல்லது.

இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம். வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் இரண்டுமே சிறுநீரக்தொற்றை உண்டாக்கும். காரணம் சிறுநீர்ப்பாதையும், ஆசன வாயும் அருகருகே இருப்பதால் எளிதில் கிருமிகள் தாக்கிவிடும்.

சர்க்கரை வியாதி இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது சிறுநீரிலும் வெளியேற்றப்படும். சிறுநீர், சிறு நீர்ப்பையில் அதிக நேரம் தங்கும்போது, சர்க்கரையால் அதிக அளவு கிருமிகள் உருவாகி தொற்றை ஏற்படுத்திவிடும்.

சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்தால் அவை கிருமிகளை உருவாக்கிவிடும். ஆகவே அவ்வப்போது சிறுநீரை கழித்துவிடுதல் அவசியம்.

இது தவிர சுத்தமான உள்ளாடை அணியாமலிருப்பது, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைக்காமலிருப்பது, போதிய அளவு நீர் குடிக்காமலிருப்பது ஆகியவைகளும் சிறுநீர் தொற்றை ஏற்படுத்தும்.