Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் முக அழகை அன்னாசியைப் பயன்படுத்தி சிறந்த சருமத்தை பெற

பெண்களின் முக அழகை அன்னாசியைப் பயன்படுத்தி சிறந்த சருமத்தை பெற

64

பெண்களின் அழகு:நம் பலரின் கனவு கொரியர்களை போன்று குறைபாடற்ற சருமத்தை பெற வேண்டும்.அவர்கள் யாரிடமும் பாதிப்படைந்த சருமத்தைப் பார்க்க முடியாது.

ஏனெனில் அங்குள்ள அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய முறைகளையும் சிகிச்சைகளையும் கண்டுபிடித்து சருமப் பிரச்சனைகளை தீர்த்து,சிறந்த சருமத்தைப்பெற உதவுகின்றனர்.

இந்த நூற்றாண்டின் சருமத்தின் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அவர்கள் அழகுச் சிகிச்சைகளின் இரகசியத்தை பாதுகாத்து வருகின்றனர்.நாம் இங்கு பார்க்கும் முறை நமது சருமத்தை பளபளபாக்குவதுடன்.சருமம் முதிர்வதை தடுத்து மிருதுவாக்கின்றது.

முகத்தை நீராவியால் பிடிக்கும் (steam) போது,சருமத்தில் உள்ள சிறு துவாரங்கள் திறந்து அதில் அழுக்குகள் மற்றும் இறந்த கலங்களை அகற்ற முடியும்.இது பருக்களை உருவாக்கும் கரும்புள்ளிகளையும் நீக்கும்.நீராவி பிடிப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சிவந்த கன்னங்களை பெற முடியும். இதனால் இளமையும் அதிகரிக்கும்.

ஒரு கனிந்த அன்னாசியைப் பயன்படுத்தி சிறந்த சருமத்தை பெற முடியும்.அன்னாசியில்செம்பு,பொட்டாசியம்,மங்கனீஸ்,நார்ச்சத்து,Bடகரோட்டின்,விட்டமின் C,B1,B2,B5 உள்ளது .இதில் உள்ள மங்கனிஸ் எலும்பு மற்றும் இணைக்கும் திசு (connective tissue) வளர்வதற்கும் ,ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றது.இதில் காணப்பபடும் ஆன்டி ஒக்ஸிடன்(Anti-oxidentant) தன்மை கிருமிகளுடன் போராடி கலங்கள்(cell) பாத்திப்படைவதை தடுக்கும்.மேலும் இதய நோய்,புற்று நோய்கள் வராமல் தடுக்கின்றது.

இந்த அன்னாசி சருமம் முதிர்வதை தடுக்கும் தன்மை உள்ளது.இது கொலாஜன் உருவாவதை தூண்டுவதன் மூலம் எளிதில் மாறக் கூடிய இறுக்கமான சருமத்தை பெற முடியும்.இதில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் விட்டமின் சி சருமத்திற்கு நன்மையைத் தருவதுடன் பருக்கள்,கட்டிகளில் இருந்து தீர்வை தருகின்றது.

பயன்படுதும் முறை
அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முகத்தை நன்றாக கழுவிய பின்னர் வெட்டி எடுக்கப்பட்ட அன்னாசி துண்டுகளை வட்ட அசைவில் முகத்தில் பூச வேண்டும்.நீராவி பிடிப்பதன் மூலம் பழச்சாறு சருமத்தில் உள்ள துவாரங்களிற்கு சென்று தீர்வைத் தரும். 15நிமிடங்களின் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி துணியால் ஈரத்தை மெதுவாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாதத்திற்கு இரு தடவைகள் செய்து வந்தால் சிறந்த பலனை பெற முடியும்.