குழந்தைகள் நலன்:உடல் பருமனான சிறுமிகள் மனச்சோர்வால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீரான எடை கொண்ட சிறுமிகளுடன் ஒப்பிடுகையில் பருமனான சிறுமிகளுக்கு 44 வீதம் மனசோர்வு அதிகமாக உள்ளதாய் தெரியவந்துள்ளது.
144,000 பேரை வைத்து நடத்திய ஆய்வு ஒன்றின் ஊடாக இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் BMI என்ற உடல் எடை குறியீட்டில் 30ஐ தாண்டியவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் ஆண்பிள்ளைகளுக்கு இந்த பிரச்சினை இல்லை என தெரியவந்துள்ளது.
ஆண் பிள்ளைகளின் எடைக்கும், மனச்சோர்விற்கும் இடையில் தொடர்பு ஏதுமில்லை என இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண் பிள்ளைகள் எடை கூடுதலாக இருப்பது வலிமை என கருதுகின்றனர். உடல் எடை பற்றிய சமூக எதிர்பார்ப்புகள் பெண் பிள்ளைகள் மீதே அதிமாக உள்ளது. இதனாலேயே அவர்கள் அதிகமாகப் பாதிக்கக்கூடும் என ஆய்வு கூறுகின்றது.
அந்த வேறுபாடே இந்த பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
5 வயதுக்குள் உடல் பருமனான நிலையை எட்டுகின்றனர். உலகில் 40 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் அவ்வாறு உள்ளனர்.
பாடசாலைல பிள்ளைகளின் செயல்திறன், நட்பு போன்றவற்றை மனச்சோர்வு பாதிக்கிறது. மனச்சோர்வு கொண்ட சிறுவர்கள் போதைப்புழக்கம் போன்ற அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளது.
பருமனான சிறுவர்களை எடை குறைக்க பெற்றோர்கள் ஊக்குவிக்கின்றனர்.
அவ்வாறு பருமனை குறைக்க விரும்பும் பெற்றோர் அவர்களது தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டாம்.
அதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வலியுறுத்துவது சிறந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.