Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்கள் உடலை அழகாக வைத்திருக்க இதை கடைப்பியுங்கள்

பெண்கள் உடலை அழகாக வைத்திருக்க இதை கடைப்பியுங்கள்

80

பெண்கள் உடல் கட்டுப்பாடு:உடல் பருமன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டிவதைக்கிறது. நவீன மையமாக மாறிவிட்ட வாழ்க்கை முறையால், உணவுப் பழக்கமும் கூட மாறித்தான் போயிருக்கிறது. ஐந்து வயதுக் குழந்தை கொழுக்மொழுக் உடல்வாகுடன் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

20 வயதுகூட நிரம்பாதவர்கள், தன் வயதுக்குச் சற்றும் பொருந்தாத பருமனுடன் வண்டி ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது. உடல் எடை அதிகமாக இருக்கும் பிரச்னையில் தவிப்பவர்கள் பலர். உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, கடினமான வொர்க்அவுட், டயட், அறுவைசிகிச்சை, மின்னணு அலைகளைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் முயற்சி என என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். இதில் பலன் கிடைத்தாலும், இவற்றால் விளையும் பக்கவிளைவுகளும் அதிகம். எந்த ஒரு உடல்பயிற்சியும் இல்லாமல், பக்க விளைவுகளை ஏற்படுத்தாத படி உடல் எடையை குறைப்பதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

உடல் எடை அதிகமாக இருக்கும் போது, மார்பு, வயிறு, புட்டம், இடுப்பு ஆகிய இடங்களில் அதிக அளவு கொழுப்புச் சேரக் கூடாது . இந்த இடங்களில் தேவையில்லாத கொழுப்புச் சேரும்போது, சர்க்கரைநோய், இதய பாதிப்புகள் போன்ற நோய்களை ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, தைராய்டு பிரச்னைகளை ஏற்படுத்தும் . சிறியவர்களுக்கு மந்தத் தன்மை, செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளை உண்டாக்கும். இதைக் கவனிக்காமல் விட்டு விட்டால், நோய்கள் தீவிரமடைந்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

உடல் எடை குறைவாக இருப்பவர்களை, உடல் எடையை அதிகரிக்க செய்வது எளிது. ஆனால், உடல் எடை அதிகமாக இருப்பவர்களை ஒல்லியானவர்களாக மாறுவது கடினமான ஒன்றுதான். இதனால், உடல் எடை அதிகரித்த பின் அவதிப்படுவதை விட, உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே நல்லது.

1 அரிசி உணவு முடிந்தவரை தவிர்த்து, கோதுமை, பார்லி உணவையும் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளில் முள்ளங்கியையும், பழங்களில் அன்னாசியையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

2 இரவு 8 மணிநேரம் உறக்கம் என்பது அவசியமான ஒன்று. அதில் 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கமாக இருத்தல் முக்கியம். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னதாக எழ வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது. இது சிறந்த உடற்பயிற்சியாகும்.

3 காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க நல்ல பலன் தரும். எலுமிச்சைப் பழத்தை ஜூஸாகவும் குடிக்கலாம். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதேபோல சோம்பு-வை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.

4 குழைவான, சூடான உணவையோ எண்ணெயில் பொரித்த உணவையோ சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். நன்றாக வேகவைத்த உணவைச் சாப்பிடுவதே சிறந்தது. பசிக்கும் போது மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

5 பால், தயிரில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. எனவே, பால் பொருள்களில், மோர் அனைவருக்கும் ஏற்ற பானம். உடல் எடை குறைய இந்த உணவுகளை எடுத்து கொள்ளும்.

6 உணவுக்கு முன்னர் சிறு துண்டு இஞ்சி நேரடியாகவோ அல்லது உணவில் சேர்த்தோ சாப்பிடலாம். இவை எவ்வளவு கடினமான உணவையும் எளிதில் செரிக்க உதவுகிறது.

7 சமையலில் சின்ன வெங்காயம், லவங்கப்பட்டை ஆகியவற்றை தினமும் சேர்த்து கொள்ள வேண்டும். மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் கறுப்பு மிளகைச் சேர்த்துக் கொண்டால், இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகள் அதிகரிக்க உதவும். இவற்றுக்கு உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கும் தன்மை கொண்டது.

8 அடிக்கடி சுடுதண்ணீர் குடிக்க பழகி கொள்ள வேண்டும். குறிப்பாக, சாப்பிடும்போது, சுடுதண்ணீர் குடிப்பது அவசியம். இது, செரிமானத்தை சீராக்குவதுடன், கொழுப்புச் சேருவதைக் குறைக்கும்.

9 மாதம் இருமுறை சிறிது விளக்கெண்ணெய் உட்கொள்ள வேண்டும். இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, உடல் கழிவுகளை நீக்கி வாயுவைத் தங்க விடாது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

10 சுரைக்காயை சமைத்து சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாதத் தண்ணீரை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.