பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையாக இருப்பது மிக முக்கியம். அந்த சுழற்சி முறையை வைத்தே அவர்களுடைய உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்னைகளையும் புரிந்து கொள்ள முடியும்.
திருமணம் ஆனபின் மாதவிலக்கு தள்ளப்போகிறது ஆனால் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் அதற்கான காரணங்கள் வேறாகவும் இதுவே திருமணத்துக்கு முன், வேறு சில ஹார்மோன் பிரச்னைகளால் மாதவிலக்கு சுழற்சி முறையில்லாமல் இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கு கர்ப்பம் மட்டுமே காரணம் அல்ல. அதையும் தாண்டி, உடல் எடை,தைராய்டு, போன்ற பல பிரச்னைகள் காரணமாக அமைகின்றன.
1. மாதவிலக்கு சுழற்சி முறை
பெரும்பாலான பெண்களுக்கு மாதம் ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் சுழற்சியின் சராசரி அளவு 21-35 நாட்கள் என்பதால் ஒரு வருடத்தில் 11-13 முறை மாதவிடாய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலே குறிப்பிட்டுள்ள அளவு என்பது ஒரு சராசரி அளவு தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த சுழற்சியில் மாறுபாடு இருக்கும். எப்படி இருந்தாலும், குறிப்பிட்ட தேதியில் மாதவிடாய் வராமல் போனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு குழப்பம் உண்டாகும். 40 நாட்களுக்கு பிறகும் மாதவிடாய் வராமல் இருப்பது தவறிய மாதவிடாய் அல்லது மாதவிடாய் இன்மை (amenorrhea) என்று கூறப்படுகிறது.
2. கர்ப்பம் இல்லாமல் மாதவிடாய் தவறுவதற்கான காரணம்
2. கர்ப்பம் இல்லாமல் மாதவிடாய் தவறுவதற்கான காரணம்
திருமணமாகிய பெண்களுக்கு தவறிய மாதவிடாய் காலம், கர்ப்பத்தின் முதல் அறிகுறியாகும். இதனை உறுதிப்படுத்த வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளலாம். ஆனால் கர்ப்பம் உண்டாகாமல் கூட மாதவிடாய் தவறிப் போகலாம். கர்ப்பம் ஆகாமல் மாதவிடாய் தள்ளி போவதற்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் முதல் அறிகுறி தவறிய மாதவிடாய். ஆனால் கர்ப்பம் இல்லாமல் கூட மாதவிடாய் காலங்கள் தள்ளிப் போகலாம் /. இதற்கு பல காரணங்கள் உண்டு.
3. இயற்கை மாதவிடாய் இன்மை (amenorrhea)
ஒரு பெண் தன வாழ்வில் பல இயற்கை நிலைகளை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இவற்றுள் சில நிலையில் உணவு, உடல் எடை, ஹார்மோன் பிரச்னை, என பல காரணங்களுக்காக மாதவிடாய் தவறலாம் .
4. முதல் நிலை மாதவிடாய் இன்மை (Primary amenorrhea)
4. முதல் நிலை மாதவிடாய் இன்மை (Primary amenorrhea)
16 வயதை கடந்த ஒரு இளம் பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி தொடங்காமல் இருப்பதை முதன்மை மாதவிடாய் இன்மை என்று கூறுகிறோம். பூப்பெய்துவதில் தாமதம் அல்லது கருப்பையில் உண்டாகும் வளர்ச்சி குறைபாட்டால் இவை உண்டாகலாம். இது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல. உடனடியாக மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சையை பெற வேண்டும்.
5. இரண்டாம் நிலை மாதவிடாய் இன்மை (Secondary amenorrhea)
5. இரண்டாம் நிலை மாதவிடாய் இன்மை (Secondary amenorrhea)
பூப்பெய்தியபின் ஒரு பெண்ணுக்கு திடீரென்று மாதவிடாய் தவறி தொடர்ந்து 3 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்தால், கர்ப்ப பரிசோதனையும் எதிர்மறையாக இருந்தால் , அதனை இரண்டாம் நிலை மாதவிடாய் இன்மை என்று கூறலாம். ஹார்மோன் சமச்சீரின்மை அல்லது கருப்பையில் உண்டாகும் அசாதாரணமான மாற்றம் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கின்மை , தொடர்ந்து 9 மாதங்கள் மாதவிடாய் தவறுதல் போன்றவை இரண்டாம் நிலை மாதவிடாய் இன்மை என்று கருதப்படுகிறது.
6. தாய்ப்பால்
6. தாய்ப்பால்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலை சுரக்கச் செய்யும் ஹார்மோன்கள் மாதவிடாய் சுழச்சியில் மாற்றங்களை உண்டாக்கலாம். இதனால் மாதவிடாய் தவறலாம். ஆகவே நீங்கள் கர்ப்பமாக இல்லாமலும் மாதவிடாய் தொடர்ச்சியாக வரவில்லை என்றால் , இந்த கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், திட உணவை எடுத்துக் கொள்ளும் வரையில் சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாது. சில பெண்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போதும் மாதவிடாய் தவறாமல் ஏற்பட்டுவிடும்.
7. மெனோபாஸ்
7. மெனோபாஸ்
பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் இறுதியை குறிப்பது மெனோபாஸ் எனப்படும். மாதவிடாய் தொடர்ந்து 12 மாதங்கள் வராமல் இருக்கும்போது அது மெனோபாஸ் ஆகும். 40-50 வயதை நெருங்கும்போது பெண்களுக்கு இந்த கட்டம் தோன்றும். இது ஒரு சாதாரண ஹார்மோன் மாற்றம் தான் மற்றும் இது பெண்கள் கருவுறும் வாய்ப்பை குறைக்கிறது.
8. மருந்துகள்
8. மருந்துகள்
சில வகை மருந்துகள் மாதவிடாயை தவறச் செய்யலாம். பொதுவாக கருத்தடை மருந்துகள் பயன்பாடு மாதவிடாய் தவறுவதற்கான முக்கிய காரணங்களாம். யாஸ் , சீசனல் , லிப்ரல் போன்ற கருத்தடை மாத்திரைகள் ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது தவறிய மாதவிடாயை தோற்றுவிக்கின்றன. இந்த புதிய கருத்தடை மாத்திரைகள் பல மாதங்கள் தொடர்ந்து மாதவிடாய் வராமல் இருக்க செய்கின்றன. ஆனால் பாரம்பரிய கருத்தடை மாத்திரைகள் மாதவிடாயை தடுப்பதில்லை. அன்டிசைக்கோட்டிக் மருந்துகள், மன அழுத்தம் தடுப்பிகள், இயக்க ஊக்கி மருந்துகள், வேதியல் உணர்வி மருந்துகள் போன்ற மருந்துகள் கர்ப்பம் அல்லாத மாதவிடாய் தவறுதலை உண்டாக்கும்.
9. ஹார்மோன் சமச்சீரின்மை
9. ஹார்மோன் சமச்சீரின்மை
நாளமில்லாச் சுரப்பியில் உண்டாகும் பிரச்சனையால் பெண் கருவுறுதலில் இயலாமை மற்றும் நிலைத்திருக்கும் அளவை விட அதிக ஹார்மோன் சுரப்பது போன்றவை பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி ஆகும். இதன் காரணமாக மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.
10. பிட்யூட்டரி கட்டிகள்
10. பிட்யூட்டரி கட்டிகள்
பிட்யூட்டரி சுரப்பியில் சில சமயங்களில் கட்டிகள் உண்டாகும். அவற்றில் சில பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் சில ஆபத்தில்லா கட்டிகளாகவும் இருக்கும். அவ்வாறு தோன்றும் ஆபத்தில்லா கட்டிகள், உடலில் ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கி, மாதவிடாய் தவறுதலை ஏற்படுத்துகிறது.
11. தைராய்ட் கோளாறு
11. தைராய்ட் கோளாறு
தைராய்டில் உள்ள குறைபாடுகள் (தைராய்டு சுரப்பி) அல்லது அதிக செயல்திறன் கொண்ட தைராய்டு (ஹைபர்டைராய்ட்) சுரப்பி போன்ற பிரச்சனைகள் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை உண்டாக்கும். இயல்பான ஹார்மோன் வழிமுறைகளை மாற்றுவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் இன்மையை ஏற்படுத்தும்.
12. அதி சீக்கிர மெனோபாஸ்
12. அதி சீக்கிர மெனோபாஸ்
பொதுவாக 40-50 வயது தான் பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டமாகும். கருப்பை செயலிழப்பு அல்லது குறைந்த ஈஸ்ட்ரோஜென் அளவு காரணமாக ஒரு சிலருக்கு 40 வயதிற்கு முன்பே மெனோபாஸ் உண்டாகலாம். இதனை ப்ரீ மெச்சூர் மெனோபாஸ் என்று கூறுவர் . இதன் காரணமாக கருவுற இயலாமை, மாதவிடாய் இன்மை போன்றவை ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.
13. உடற்கூறியல் பிரச்சினைகள்
13. உடற்கூறியல் பிரச்சினைகள்
பெண்களின் பிறப்பு உறுப்புகளில் உண்டாகும் பிரச்சனை அல்லது பெண்களுடைய உடல் ரீதியான ( வெளிப்படை தோற்றம் மட்டுமல்ல) உள் உடற்கூறுகளில் ஏற்படுகிற பிரச்சனைகள் சில நேரங்களில் மாதிவிடாய் இன்மையை உண்டாக்கும்.
14. கருப்பையில் வடு
14. கருப்பையில் வடு
அறுவைசிகிச்சைப் பிரிவு, கருப்பை நரம்பு அறுவை சிகிச்சை அல்லது டி & சி (டிலேஷன் மற்றும் க்யுரேட்டேஜ்) போன்ற ஒரு நடைமுறைக்குப் பிறகு. கருப்பையில் சில நேரங்களில் கருப்பை வடுக்கள் தோன்றுகின்றன. இந்த வடு திசுக்கள் கருப்பை அல்லது கருப்பை சுவர்களில் உண்டாகின்றன.கருப்பை வடு வழக்கமான இயல்பான சுழற்சியின் போது கருப்பை உள் அகலத்தின் சாதாரண உருவாக்கம் மற்றும் உதிர்தலை தடுக்கிறது மற்றும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் இன்மையை ஏற்படுத்துகிறது.
15. இனப்பெருக்க உறுப்புகள் இல்லாமை
15. இனப்பெருக்க உறுப்புகள் இல்லாமை
பிறந்தது முதல் சில பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகள் இல்லாமல் இருக்கும். அதாவது கருப்பை இல்லாமல், அல்லது இனப்பெருக்க உறுப்பு மிகச்சிறிய அளவிலோ அல்லது துளைகள் இல்லாமலோ கூட இருக்கும். அத்தகைய பெண்களுக்கு மாதவிடாய் காலங்கள் இருக்காது.
16. பெண்ணுறுப்பில் தடை
16. பெண்ணுறுப்பில் தடை
உருவமைப்பில் உண்டாகும் இந்த அசாதாரண அமைப்பு, பென்பெண்ணுறுப்பில் இருந்து இரத்தபோக்கை வெளியேற்றுவதை தடுக்கிறது. ஆனால் ஒரு எளிய அறுவை சிகிச்சை செய்வதால் இந்த தடை நீக்கப்பட்டு, மாதவிடாய் சீராகும்.
17. வாழ்க்கைமுறை காரணிகள்
17. வாழ்க்கைமுறை காரணிகள்
அதிக அழுத்தம் அல்லது கடுமையான கவலை ஒரு இயல்பான ஹார்மோன் உற்பத்தியை எதிர்மறையாக பாதிக்கக்கூடும், மூளையின் அடிபகுதியான ஹைபோதாலமஸால் இத்தகைய ஹார்மோன் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால் மாதவிடாய் தடைபடுதல் அல்லது தவறுதல் போன்றவை நிகழலாம். மன அழுத்தத்தில் இருந்து விடுபடும்போது, மாதவிடாய் சீராக ஏற்படும்.
18. அதீத எடை மாற்றம்
18. அதீத எடை மாற்றம்
திடீரென அதிக எடை குறைவது அல்லது எடை அதிகரிப்பது ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கும். இதனால் மாதவிடாய் சுழற்சியில் தற்காலிக தடை உண்டாகலாம்.
கொழுப்பு செல்கள் ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு பங்களிப்பு செய்கின்றன, உடலில் உள்ள கொழுப்பின் எந்தவித தடங்கல் அல்லது ஏற்றத்தாழ்வு ஒரு பெண்ணின் கருவுறுதல் மற்றும் மாதவிடாய் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே, மாதவிடாய் தள்ளி போனால், கர்ப்பமாக இல்லாமல் இருந்தால் உங்கள் எடையை கண்காணிக்கலாம்.
19. உணவு சீர்கேடு
19. உணவு சீர்கேடு
கொழுப்பு இழப்பு மற்றும் உடல் மெலிவு காரணமாக அனோரெக்ஸியா அல்லது புலிமியா போன்ற உணவு சீர்கேடுகள் அசாதாரணமான ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த காரணங்களால் மாதவிடாய் சுழற்சியில் தடை ஏற்படலாம் . இதனால் மாதவிடாய் இன்மை உண்டாகலாம்.
20. அதிக உடற்பயிற்சி
20. அதிக உடற்பயிற்சி
அதிகமாகவும் , கடினமாகவும் உடற்பயிற்சி செய்வதால், அதிக ஆற்றல் செலவாகிறது, மேலும் உடலில் கொழுப்பு இழப்பு ஏற்படுகிறது. இதனால்,ஒழுங்கான மாதவிடாய் பாதிக்கப்படலாம்.
21. மாதவிடாய் தவறுதலை எப்படி சீராக்கலாம்
21. மாதவிடாய் தவறுதலை எப்படி சீராக்கலாம்
முதல் முறையாக மாதவிடாய் தவறிப் போனால், முதல் வேலையாக வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதற்கான கருவி, மருந்தகத்தில் கிடைக்கும். இவற்றை வாங்கி வீட்டிலேயே பரிசோதித்துக் கொள்ளலாம். கர்ப்பம் உறுதி செய்யப்பட்டால் , அதுவும் இது உங்கள் முதல் குழந்தையாக இருப்பின் , உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளவும்.
22. பொதுவான காரணிகள்
22. பொதுவான காரணிகள்
கர்ப்பமாக இருக்காது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், மாதவிடாய் தள்ளி போவதற்கான பொதுவான காரணங்களைப் பற்றி சிந்தியுங்கள். கூடுதல் மன அழுத்தம், உடற்பயிற்சி, எடை மாற்றம் போன்றவை காரணமாக இருக்கலாம். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை பற்றி யோசியுங்கள், ஹார்மோன் தொடர்பாக நீங்கள் அனுபவிக்கும் மற்ற அறிகுறிகளோடு இதனையும் தொடர்பு படுத்தி பாருங்கள். இவை எல்லாம் தான் மாதவிடாய் தவறுவதற்கான பொதுவான காரணங்கள் ஆகும்.
23. மருத்துவ உதவியை நாடுங்கள்
23. மருத்துவ உதவியை நாடுங்கள்
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தவறினால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. உங்கள் மாதவிடாய் சுழற்சியின் அட்டவணை மற்றும் நீங்கள் கண்டறிந்த அறிகுறிகள் போன்றவற்றை கூறுவதால், உங்கள் மருத்துவர் ஆய்வு செய்ய உதவியாக இருக்கும். மாதவிடாய் இன்மையின் காரணத்தை பொறுத்து, இதன் சிகிச்சை வேறுபடும்,. இதனை உறுதிசெய்ய சில பரிசோதனைகள் எடுக்கப்படும்.