Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களே உங்கள் உதட்டு அழகு தகவல் முழுமையாக படியுங்க

பெண்களே உங்கள் உதட்டு அழகு தகவல் முழுமையாக படியுங்க

47

மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு.

சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும். உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும்.

கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது.

நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்தல் அவசியம்.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப்ஸ்டிக் போட்டவர்கள் அதிக நேரம் வெயிலில் அலைவதோ, ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்துக்கு மேல் பயன்படுத்துவதோ கூடாது.

முதலில் லிப் லைனரால் உதடுகளை அவுட் லைன் செய்து, பிறகு, அதன் மூலமே உதடுகளை நிரப்பவும். முதலில் லிப்ஸ்டிக்கை தடவி, பிறகு லிப் லைனரால் அவுட் லைனும் செய்யலாம். இம்முறை உதடுகளை மென்மையானதாக, கவர்ச்சியானதாக காட்டும்.