பெண்கள் ஆண்கள் உறவு:திருமணத்துக்கு தயாராகும் வீடுகளில், பெண் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கட்டுப்பாடுகளை உருவாக்கி கேட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இன்று மாப்பிள்ளை வீடுகளுக்கு இணையாக பெண்களும் தேவைகளை முன் வைக்க தொடங்கிவிட்டனர்.
தேவை மாறிவிட்டது
திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் பலர் வைக்கும் முதல் முக்கிய தேவை என்பது, மாப்பிள்ளைக்கும் சமையல் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான். பெண்களுக்கு ஏன் சமையல் தெரியும் ஆண்களை பிடிக்கிறது..? அதற்கான காரணங்கள் என்ன..? தொடர்ந்து பார்க்கலாம்.
டிரென்டிங் அமைத்த கி & கா
கடந்த 2016ல் பாலிவுட்டில் வெளியான படம் ’கி அன்ட் கா’. இதில் வேலைக்கு செல்லும் கரீனா கபூர் கானுக்கு அவரது கணவர் அர்ஜூன் கபூர் வீட்டிலிருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்வார். வேலை முடித்து வரும் மனைவிக்கு, கணவர் அர்ஜூன் கபூர் காட்டு பரிவு, பாசம் இந்திய இளம் பெண்களை பெரிதும் கவர்ந்தது.
சொதப்பலான சமையல்
இன்றைய காலத்தில் பெண்களுக்கு பல வேலைகள் உள்ளன. அதனால் பலருக்கு சமைக்கும் திறன் ஓரளவுக்கு தான். ஆண்கள் இன்று நா சுவைக்கு பிரதானம் தருகின்றனர்.இதன் காரணமாக ஆண்களுக்கு விருப்பமான உணவை அவர்களே சமைக்க பழகி கொள்வது நல்லது என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக உள்ளது.
சுமூக உறவு
ஒரு காரியத்தை கணவனும், மனைவியும் இணைந்து செய்யும் போது அதில் ஒரு புரிதல் உருவாகும். வேலையில் வேறுபாடுகள் இருப்பதால் வீட்டு வேலையை செய்யும் போது காதல் அதிகரிக்கும். அதில் சமையலை கணவனும், மனையும் இணைந்து செய்தால் தாம்பத்யம் வலு பெறும்.
சமைக்க தெரிந்த ஆண், வாழ்க்கை துணையாக வந்தால் சிறப்பாக இருக்கும் என்று இளம் பெண்கள் கருதுகின்றனர். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகவும் காதலுடன் இருக்கும் என பெண்கள் நம்புகின்றனர்.
புரிதல்
எல்லா திருமண வாழ்க்கையிலும் நல்ல புரிதல் இருக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு. சமையல் தெரிந்த ஒரு ஆண், திருமண வாழ்க்கையை புரிதலுடன் கையாளுவார் என்பது பெண்களின் நம்பிக்கை