Home ஜல்சா கால்களை இப்பிடி வச்கிட்டு உக்கார்ந்தால் எப்படிபட்டவங்க ?

கால்களை இப்பிடி வச்கிட்டு உக்கார்ந்தால் எப்படிபட்டவங்க ?

71

பெண்கள் அமர்வதை வைத்து, பெண்களின் குணத்தை கணிக்கமுடியும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அமைதியான பெண்கள் எப்படி அமர்வார்கள், தைரியமான பெண்கள் எப்படி அமர்வார்கள், கர்வம் பிடித்த பெண்கள் எப்படி அமர்வார்கள் என ஒவ்வொரு பெண்கள் அமரும் விதமும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் எப்படி அமர்வீர்கள், உங்களுக்கு கொடுக்கப்பட்ட விமர்சனம் பொருந்துகிறதா என நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கோங்க கேர்ஸ்.

நீங்கள் பொதுவாகவே கால்களை மடக்கி தான் அமர்வீர்களா…?

தரை அல்லது , நாற்காலியில் கால்களை மடக்கி உட்காரும் நபர்கள் திறந்த மனம் கொண்டவராக இருப்பார்கள். எந்த ஒரு நிலையிலும் வளைந்து கொடுத்து அதற்கு ஏற்ப நடந்துக் கொள்வார்கள். முக்கியமாக, இவர்கள் மிகவும் வலிமையான மன சுபாவம் உடையவர்கள்.

நீங்கள் நேராக அமர்பவரா..?

ஒரு சிலர் மட்டுமே எப்போதும் மிகவும் நேராக அமரும் பழக்கம் உடையவர்கள். இப்படிப்பட்டவர்கள் மிகவும் வலிமையானவர்கள், நம்பகத்தன்மை உள்ளவர்களாக விளங்குவார்கள். எதிலும் கூச்சப்பட்டு ஒதுங்கி நிற்காமல் மனதிற்கு தோன்றியதை தானாக முன் வந்து செய்பவர்கள்.

நீங்கள் எப்போதும் எதன் மீதாவது சாய்ந்தே அமரும் பழக்கம் உடையவரா?

இப்படி அமரும் பழக்கம் உடையவர்கள், எதையும் உற்று கவனித்து, உள்வாங்கிக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ற போல் நடந்துக் கொள்வார்கள்.

நீங்கள் பொதுவாகவே கைகட்டி அமர்பவரா?

அப்போது நீங்கள் கண்டிப்பாக மிகவும் நம்பிக்கை உடைய பெண்கள். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதனை தனி ஆளாக இருந்து கூட சமாளித்து அதில் இருந்து வெளியே வரும் வீரப் பெண்மணிகள். மற்றவர்களுக்காகவும் அதிகம் சிந்திபீர்கள்.

நீங்கள் அமரும் போது கால் ஆட்டிக்கொண்டே இருப்பவரா?

சிலர் நாற்காலி, மற்றும் தரையில் அமர்ந்திருக்கும் போது கூட, அவர்களுக்கே தெரியாமல் கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பார்கள். இத்தகைய பழக்கத்தைக் கொண்டவர்கள், எதையும் திட்டம் போட்டு செயல் படுத்த நினைப்பவர்கள். நேரத்தை வீண்ணடிக்க விரும்ப மாட்டார்கள். மற்றவர்களிடம் இருந்து எப்படி வேலை வாங்குவது என்கிற சூத்திரத்தை நன்கு உணர்ந்தவர்கள்.

கால்களை விரிந்தவாறு அமர்பவரா…?

இப்படி அமரும் பெண்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புபவராக இருப்பார்கள். புதிய நபர்களுடன் பழகுவதில் இவர்களுக்கு அதிகம் ஆர்வம் இருக்கும். அதே போல் புதிய அனுபவங்களை கற்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். எப்போதும் வரும் பிரச்னையை ஒரு கை பார்க்கும் பெண்கள் இவர்கள்.

கால் மேல் கால் போட்டு அமர்பவர்களா?

யாரையும் எளிதில் இவர்கள் நம்ப மாட்டார்கள். நம்பினால் அவர்களுக்காக எதையும் துணிந்து செய்யும் பெண்கள். எப்போதும் தன் கை தான் தனக்குதவி என்கிற பழமொழியை புரிந்து செயல்படும் பெண்கள்.