பெண்கள் மருத்துவம்:மனிதர்கள் எல்லாருக்குமே கால் மேல கால் போட்டு உட்காரக் கூடிய ஒரு பழக்கம் இருக்கு. அந்த காலத்துல வீட்டில் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போடக்கூடாது என்று சொல்வார்கள். அப்படி செஞ்சா அதட்டுவாங்க, பல நேரத்துல இது மரியாதை குறைவான நடத்தை அப்படினு சொல்லுவாங்க.
ஆனால் இன்று இது ஒரு சாதாரண பழக்கமாக மாறிடுச்சு. இப்படி கால் மேலே கால் போட்டு உட்காரதுனால சில உடல் நலக் குறைபாடும் ஏற்படுது அப்படினு சொல்றாங்க.. என்ன உடல்நலக் குறைபாடு இருக்கும் அப்படிங்கரத பார்க்கலாம்,
பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு தான் கால் மேல் கால் போட்டுக்கொள்ளும் பழக்கம் நிறைய உள்ளது.தற்போது இது பெண்களின் உடல் மொழியாகவே மாறி வருகிறது என்றும் கூறலாம்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருந்தால் பக்கவாதம் வர வாய்ப்பு அதிகமாக என்று கூறுகிறார்கள்.அதே போல் கால்களை Cross ஆக போட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தாலும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள்.
இப்படி கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் என்ன ஆகும் அப்படிங்கரத கண்டுபிடிக்க 2010ஆம் ஆண்டு ஒரு ஆய்வு நடந்தது, அந்த ஆய்வின் இறுதியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தால் உடலில் ரத்த அழுத்தம் அதிகம் ஆகும் எனவும் கூறுகிறார்கள்.அது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட வியாதிகளும் வரும்னு சொல்றாங்க.
உடல் முழுதும் ஓடும் ரத்தம் ஓட்டத்தை சீராக வைக்காது எனவும் கூறுகிறார்கள்.இப்படி கால் மேல் கால் போட்டு அமர்வதால மேல் உடலிற்கு மட்டும் ரத்த ஓட்டம் அதிகமாகி இதயத்திற்கு அதிக ரத்தத்தை அனுப்புகிறது. இதுவே ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
இப்படி கால் மேல் கால் போட்டு அமர்வதால் கழுத்து வலி,இடுப்பு வலி,அசௌகரியமான நிலை என அனைத்தும் ஏற்படும்,மேலும் இப்படி கால் மேல கால் போட்டு உட்காருவதினால் இடுப்பு எலும்புகளில் உள்ள நிரம்புகள் சுருங்குகிறது.கர்பப்பையில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்.இனிமேல் கால் மேல் கால் போட்டு அமர்வதை தவிருங்கள்.