Home பெண்கள் அழகு குறிப்பு இரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது உண்டாகும் கருமையை போக்க

இரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது உண்டாகும் கருமையை போக்க

142

அழகு குறிப்பு:சிலருக்கு நடக்கும் அவர்களி\ன் இரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது

ஏற்படும் உராய்வின் காரணமாக அந்த கருமை ஏற்பட வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்கு சிற்சில வியாதிகளின் அறிகுறிகளாகவும் இருக்க‍வும் வாய்ப்பு உண்டு. ஆகவே மருத்துவரிடம் சென்று காண்பிப்ப‍து சாலச் சிறந்தது.

சாதாரணமாக‌ உங்கள் உள் தொடை (Thigh) பகுதியில் படிந்துள்ள‍ கருமை நிறத்தை போக்க ஆப்பிள் சீடர் வினிகரில் பேக்கிங் சோடா போட்டு நன்றாக க‌லந்து களிம்பு போல் செய்து, கருமை உள்ள‍ அந்த உள் தொடை பகுதியில் நன்றாக‌ தடவி, சில மணித்துளிகள் நன்கு காய வைக்க வேண்டும். அதன்பிறகு தடவிய அந்த களிம்பை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதுபோன்றே 7 நாட்கள் (ஒரு வாரம்) தொடர்ந்து செய்து வந்தால்,… உள்தொடையில் உள்ள‍ கருமை முற்றிலுமாக மறைந்த இயற்கையான உங்கள்தோலின் நிறத்தை பெற்று நல்ல மாற்றத்தை நீங்களே கண்கூடாக காணலாம்.

மருத்துவரின் ஆலோசனையின்றி செய்யக்கூடாது

ந‌மது உடலின் முழு எடையையும் தாங்கும் வல்ல‍மை படைத்தது கால்கள்தான். அந்த

கால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாக த்தான் இருக்கும். கால்களில் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, தொடை முதல் பாதம் வரை (From Thigh to Feet) அழகா க காட்சியளிக்க இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் யோகார்ட் (தயிர்), ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கால்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் கால்களில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றலாம். விடாப்படியான தழும்புகளும் மறையும்.

கோதுமை மாவு சருமத்தை இறுக்கிப் பிடிக்கும். இதனால் அதிகப்படி யான சதைகள் கட்டுப்படும். போதாதற்கு அழுக்குகளை நீக்கவும் சிற ந்தது. 1 டீஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில் 1ஸ்பூன் எலுமி ச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கால்களில் தேய்க்கவும். நன்றாக காய்ந்ததும் கழுவ வேண்டும்.

கால்களில் இருக்கும் சருமம் மென்மையாக இருப்பதால் அதி ல் குளிர்காலத்தில் சதுர சதுரமாக வறண்டு போன கோடுகள் தெரி யும். இதனை தவிர்க்க, ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சினால் நனைத்து கால் முழுக்க தடவுங்கள்.

இரவில் அவ்வாறு செய்து விட்டு படுக்கவும். இதனால் கால்களில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.

கடைகளில் அவகாடோ எண்ணெய் விற்கும். அதனை வாங்கி கால்களி ல் தினமும் காலை மாலை என இருவேளை தடவி வாருங்கள். மென்மையான பளபளவென கால்கள் கிடைக்கும்.

புதினா சாறை எடுத்து கால்களில் தடவினால் கால்களில் உண்டாகும் கருமை, சொரசொரப்பு நீங்கி, மென்மையான கால்களைப் பெறுவீர்கள். முட்டிகளும் தேய்த்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.