Home பாலியல் தாமதமாக பூப்பெய்தால் ஆயுள் நீடிக்குமா…?

தாமதமாக பூப்பெய்தால் ஆயுள் நீடிக்குமா…?

25

பெண் பிள்ளைகள் 12 வயதிற்குமேல் பூப்பெய்தால் அல்லது, 50 வயதிற்கு மேல் மெனோபாஸ் அடைந்தால் 90 வயது வரைக்கும் ஆரோக்கியமாக வாழலாம் என ஆராய்ச்சி கூறுகின்றது.

தாமதமாக பூப்பெய்தும் பெண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு மிகக் குறைவு எனவும், தாமதமாக மெனோபாஸ் அடையும் பெண்களுக்கு உடல் மிக ஆரோக்கியமாகவும் இருக்குமென கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் முது கலை மாணவரும் ஆராய்ச்சியாளருமான அலாதின் ஷாட்த்யாப் என்பவர் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், இவர்களுக்கு புகைப்பிடித்தலின் மீது விருப்பமற்றவர்களாக இருக்கிறார்கள்.

சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பும் மிகக் குறைவு என கூறுகின்றார்.

விரைவில் பூப்பெய்பவர்கள் புகைப்பிடித்தால், விரைவில் இதயம் பழுதடையவும். கருப்பை பாதிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தாமதமாக மெனோபாஸ் ஆகுபவர்களுக்கு இதய நோய்கள் வருவது குறைவு. இவர்கள் இதயம் வலுவாக இருக்க ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. ஆகவே இதயம் பலப்படும்.

இதைபற்றிய தகவல் ஆன்லைன் மெனோபாஸ் என்ற இதழில் வெளிவந்துள்ளது.

ஆராய்ச்சியில் சுமார் 16,000 பேர் ஈடுபட்டனர்.பூப்பெய்த காலம் மற்றும் மெனோபாஸ் ஆன காலம் ஆகியவை கணக்கிலெடுக்கப்பட்டு இந்த ஆராய்ச்சி நடந்தது.

இவர்களில் காலம் தாழ்த்தி பூப்பெய்தவர்களும், மெனோபாஸ் ஆனவர்களும் 55 சதவீதம் 90 வயது வரை உயிரோடு வாழ்கிறார்கள். இந்த ஆய்வு காலம் சுமார் 21 ஆண்டு நடந்தது.