Home ஆரோக்கியம் Girls Hot அதிகரிக்கும் பெண்களின்புகைப் பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள்

Girls Hot அதிகரிக்கும் பெண்களின்புகைப் பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள்

30

ஆண்களுக்கு இருந்த அத்தனை கெட்டப் பழக்கங்களையும் இன்று பெண்களும் கடைபிடிக்க தொடங்கி விட்டார்கள். இதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.

அதிகரிக்கும் பெண்களின் புகைப் பழக்கம் – ஏற்படுத்தும் பாதிப்புகள்
முன்பொரு காலத்தில் ஆண்களுக்கு இருந்த அத்தனை கெட்டப் பழக்கங்களையும் இன்று பெண்களும் கடைபிடிக்க தொடங்கி விட்டார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று இந்த கெட்ட பழக்கத்திற்கு சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். புகைப் பிடிப்பதில் ஆண்களைவிட இந்தியப் பெண்கள் கில்லாடிகள் என்று அமெரிக்க மெடிக்கல் அசோசியேசன் 22 வருடங்களாக நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

அந்த ஆய்வின்படி, இந்தியாவில் தற்போது 12.1 மில்லியன் பெண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். இது அமெரிக்க பெண்களைவிட அதிகம் என்கிறது அந்த தகவல். இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒருவர் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை 8.2. கடந்த 1980-ம் ஆண்டில் இந்தியாவில் புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 33.8 சதவீதமாக இருந்தது. தற்போது அது 23 சதவீதமாக குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 721 மில்லியனாக இருந்த புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 967 மில்லியனாக அதிகரித்துள்ள வேளையில் இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 10 ஆண்களில் 3 பேர் சிகரெட் பிடிக்கிறார்கள். 20 பெண்களில் ஒருவர் சிகரெட் பிடிக்கிறார். மேலும் இந்தியாவில் புகைப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6.1 சதவீதமாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5.1 சதவீதமாகவும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

புகைப்பிடிப்பது கெடுதல் என்று என்னதான் மருத்துவர்கள் ஒருபக்கம் கத்தினாலும் மது மற்றும் புகைப்பிடித்தல் இன்றைய பேஷனாக மாறியிருக்கிறது. இந்த ஆய்வுதான் உலக அளவில் புகைத்து தள்ளுவதில் ஆண்களைவிட இந்திய பெண்கள் கில்லாடிகள் என்றும் தெரிவிக்கிறது.

பெண்களின் புகைப்பிடிக்கும் பழக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் :

* புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.

* புகைப்பழக்கம் பல்லோப்பியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

* புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.

* பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (menopause) சீக்கிரமே துவங்கி விடும்.

* பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.

* பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (second hand smoke) மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.