Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களே உங்கள் தலையில் பேன் தொல்லை தாங்கமுடியலையா? தீர்வு இங்கே

பெண்களே உங்கள் தலையில் பேன் தொல்லை தாங்கமுடியலையா? தீர்வு இங்கே

50

பெண்கள் அழகு:பேன், ஈறு போன்ற தொல்லையிலிருந்து விடுபட மருந்தகங்களில் பல மருந்துகளை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் பேன் போகிறதோ இல்லையோ, முடி உதிர்வு அதிகமாகும். ஆனால் நாம் வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்களை கொண்டு இயற்கை முறையில் ஒழித்து கட்டலாம்.

# ஆயுர்வேத மருத்துவத்தில் நரஸிங்க தைலம் என்று உள்ளது. இதைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

# சீத்தாப்பழ விதைகளைக் காயவைத்துப் பொடி செய்து சிறிதளவு எடுத்துச் சீயக்காயில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் ஈறு, பேன் தொல்லை குறையும்.

# வசம்பைத் தண்ணீர்விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவைக்க வேண்டும். பிறகு, தண்ணீரில் தலை முடியை நன்றாக அலசினால் பேன் தொல்லை குறையும்.

# துளசி இலையை நன்றாக மையாக அரைத்து, தலையில் தடவிச் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் செத்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.

# உப்பு கலக்காத 50 கிராம் வேப்பம்பூவை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், பேன் தொல்லை குறையும்.

# வால் மிளகை ஊறவைத்துப் பால் விட்டு அரைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளிக்க, பேன் தொல்லை குறையும்.

# வேப்பிலைத் தூள் – அரை டீஸ்பூன், கடுக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் – 2 டீஸ்பூன், பயத்தமாவு – 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன் ஆகியவற்றுடன் வெந்நீரைக் கலந்து தலையில் பூசிக்கொண்டு, பத்து நிமிடம் கழித்து அலசிக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.