Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க….!

பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க….!

84

பெண்களின் அழகு குறிப்பு:பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேல்புறமும், தாடைக்கு கீழ்புறமும் முடி வளர்வதைப் பார்த்திருப்போம். இதற்கு காரனம் ஆண்களின் உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள், பெண்களின் உடலில் சுரக்கும்போது இது போன்ற தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்கிறது.
சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே இதிலிருந்து விடுபட முடியும். மேலும் இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம், சருமத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் வராது.

சர்க்கரையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துமுகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.இவ்வாறு வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சி தடைபடும்.

கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

சோள மாவு, 1 டீஸ்பூன் சர்க்கரையை சம அளவு எடுத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து, அதனை முகத்தில் தடவி, உலர விட்டு கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும்.

ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.

கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்.