Home உறவு-காதல் ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

32

பெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசம் தான்.

எதிர்பார்ப்பு:-

தான் விரும்பும் ஒரு விஷயத்தை செய்து தன்னை சந்தோஷப்படுத்தும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

எந்த செயலாக இருந்தாலும், மற்றவர் உதவியை எதிர்பாராமல் தனிச்சையாக செயல்பட கூடிய ஆண்களை மிகவும் புடிக்கும்.

எதற்கெடுத்தாலும், எதிர்மறையாக பேசாமல், விரும்பாத ஒரு காரியத்தை காதலன் செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக வந்து சாரி கேட்கும் அந்தத் தருணம்.

எதிர்பார்க்கும் தருணத்தில் ஏங்கச்செய்து, எதிர்பாராமல் முத்தமிடும் ஆண்களின் விளையாட்டு தணத்தில் பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

என்ன சூழ்நிலையாக இருந்தாலும் தங்களோடு, தங்களுக்கு உறுதுணையாகவும், வாழ்க்கை துணையாகவும் இருக்கும் ஆண்களை விருப்பப்படுகிறார்கள்.

சண்டை வந்து பிரிந்த பின் சில நிமிடங்கள் கழித்து காதலன் போன் செய்து பேசும் போது பெண் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த மாதிரி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.

மகிழ்ச்சியான தருணத்தில் தலைகோதும் விரலும், சோக தருணத்தில் தலை சாய மடியும் தரும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சி அடைகிறாள்.