காதல் உறவுகள்:ஆண்,பெண் உறவானது ஆதாம்,ஏவாள் காலம் தொட்டு போற்றத்தக்கதாகவே இருந்துவந்துள்ளது. இன்றைய மாறிவரும் சூழ்நிலையில் ஆண்,பெண் இருவரினதும் உறவின் ஸ்திரத்தன்மையானது இல்லாமல் போவதாக கூறப்படுகின்றது. இதற்கு பல காரணிகள் முன்வைக்கப்பட்ட போதிலும் முக்கிய காரணியான இழந்துவரும் நம்பிக்கையினை அனைவருமே கூற தவறுவதில்லை .
பெண்களை பொறுத்த வகையில் தமது ஆண்துணை மீதான பொதுவான குற்றச்சாட்டாக முன் வைப்பது “அவர் முன்பு போல் இல்லை ” என்பது தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆயினும் ஒப்பீட்டளவில் பெண்களே ஆண்களால் இலகுவாக ஏமாற்றப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு பெண்களின் இயல்பான நடத்தைகள் காரணம் என கூறப்படுகின்றது. இவ்வாறு பெண்கள் இலகுவாக தமது ஆண்துணையால் ஏமாற்றப்படுவதற்கான காரணிகளை இவைதான்
உறவில் ஏற்படும் சலிப்புத்தன்மை.
ஆண்களுக்கான பொதுவான மனோவியல் பிரச்சினை அல்லது அவர்களின் இயல்பான உணர்வு எந்த விடயத்திலும் மிகவிரைவில் சலிப்படைந்து விடுவது. அவர்களது ஆசைகள், விருப்பங்கள் அனைத்துமே நீண்டகாலம் நிலைத்து இருக்கும் தன்மையினை கொண்டிருப்பது இல்லை. அது ஆண்களுக்கான குணவியல்பாகும். இதனால் தமது உறவு நிலையில் அவர்களுக்கு விரைவாக ஏற்படும் சலிப்புத்தன்மையே பல விடயங்களில் பெண்களை தட்டிக்கழிப்பதற்கான காரணியாக அமைந்துவிடுகிறது. அவ்வாறே தட்டிக்கழிப்பதற்காக காரணங்களை தேடுவதையும், பொய்களை இயல்பாக கூறுவதையும் ஆண்கள் செய்துவருகின்றனர் .
முக்கியத்துவம் குறைதல்
பெண்களுடனான உறவின் போது சில காலத்தின் பின்னர் சலிப்புத்தன்மை அதிகரிக்கப்பட்டு, அவர்களுக்கான முன் உரிமையினை ஆண்கள் வழங்கிட தவறுகின்றனர். இயல்பாகவே இவர்களது ஸ்திரமற்ற மனப்போக்கானது அவர்களது கவனசிதறல்களை அதிகப்படுத்துவதாகவே அமைந்துவிடுவதனை காணலாம்.
ஆண்களின் அளவற்ற கட்டுப்பாடுகள்
ஆண்களுக்கே உரித்தான பாரிய பிரச்சினை இதுதான். சமூகத்தில் ஆண்கள் எத்தனை பெண்களுடனும், எவ்வகை நிலைகளிலும் பழகுவதனை இயல்பாக கொண்டு இருப்பினும் தமது துணை என்ற பட்சத்தில் தாம் விரும்பியதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற மனநிலையினை கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக தமது பெண்துணைக்கு அதிகபட்ச கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் பல்வேறு முரண்பாடுகளுக்கு இரு தரப்பினரும் முகம் கொடுக்க நேர்வதனை காணலாம் .
எதிர்ப்பினை கட்டுப்படுத்த முடியாத தன்மை
எதிர்பாலினரின் இயல்பான ஒரு மனப்பாங்கானது எதிர்ப்பினை வெளிக்காட்டுவது ஆகும். என்னதான் சரியான விடயங்களை இரு பாலரும் செய்த போதும் கூட தமது துணை என்ற பட்சத்தில் அதற்கு சிறுதுளி எதிர்ப்பேனும் காட்டிவிட வேண்டும் என எண்ணுவது இயல்பு. அதிலும் பெண்களின் முடிவுகள் ,கருத்துக்களுக்கு முதலில் இயல்பாகவே ஆண்களை எதிரான கருத்தினையே முன் வைப்பார்கள். இது ஆண்களின் குணவியல்புகளில் ஒன்று ஆகும். எனவே இதன் காரணமாகவும் பெண்களை ஏமாற்றுவதனை இயல்பாக ஆண்கள் கொண்டிருப்பது அறியப்படுகின்றது.
ஆசைகளின் ஏமாற்றம்
உணர்வின் அடிப்படையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமானது என உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன . அவ்வாறே பெண்களை விட எந்த விடயத்திற்குமான ஆசைகளையும் ஆர்வத்தினையும் அதிகளவில் வெளிப்படுத்தும் தன்மையினை ஆண்கள் கொண்டிருப்பதாகவும் அறியப்படுகின்றது. இதன் காரணமாக பெண்கள் மீது தாம் கொண்டுள்ள ஆசைகள் விருப்பங்கள் போன்றவற்றை விரைவாக வெளிக்காட்டி விடுவதுடன் அதன் காரணமாக ஏமாற்றமும் அடைந்து விடுவதாக ஆய்வின் அடிப்படையில் உறுதிபட கூறப்பட்டுள்ளது. இதனாலும் ஆண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு தமது பெண் துணையினை ஏமாற்றவும் செய்வதாக அறியப்படுகின்றது .
ஆணுக்கும் பெண்ணுக்கும் மனதளவிலும், உடலளவிலும் மாறுபட்ட எண்ணங்கள் உணர்வுகள், விருப்பங்கள் போன்ற
விடயங்கள் இருப்பது இயல்பானது. ஆயினும் எதிர்பாலார் மீதான ஈர்ப்பும், விருப்புமான விடயங்களே அவர்களின் உறவு நிலையினை வலுப்படுத்தி வருகின்றது. பொதுவாக ஆணுக்கும், பெண்ணுக்கும் இயல்பாக இருக்க கூடிய இயல்புநிலையினை இரண்டு தரப்பினரும் உணர்ந்து , புரிந்து கொள்ளும் பட்சத்தில் ஏமாற்றப்படுவதும், விரிசல் நிலை ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என்பதை யாவரும் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது.