Home ஆரோக்கியம் பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் தாக்கும் நோய்!

பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் தாக்கும் நோய்!

26

mothers-is-god-230116-380-puthinamஇதுவரை காலமும் பெண்களை அதிகம் பாதிப்படைய செய்த மார்பக புற்றுநோய் தற்போது ஆண்களையும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வருடாந்தம் மார்பக புற்றுநோய் காரணமாக 2000 இலிருந்து 2500 பெண்கள் பாதிக்கப்படுவதுடன் வருடத்திற்கு 50 ஆண்களும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்திரஜன் எனும் ஹோர்மோன் தாக்கத்தினால் 99 வீத பெண்கள் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100க்கு ஒரு சதவீதமான ஆண்களும் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுவதாக மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சானிக்க டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உடல் பருமன் உள்ள ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் கிடைக்காமை, மருந்து பயன்பாட்டு, குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகளை நிறுத்தாமல் நீண்ட காலம் பயன்படுத்திகின்றமை போன்றவை மார்பு புற்று நோய் ஏற்பட காரணமாக கருதப்படுகின்றது.

இலங்கையில் ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய் வீதம் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழுப்பு சத்து அதிகம் உள்ளடங்கிய உணவை தவிர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.