Home குழந்தை நலம் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் வழங்கவேண்டிய அறிவுரைகள்

பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் வழங்கவேண்டிய அறிவுரைகள்

69

குழந்தை நலம்:பெண் பிள்ளைங்க நல்லா படிக்கணும், நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று பல வி‌ஷயங்களை யோசிக்கிறோம்; ஆனால், எப்படி நடந்துகொண்டால் இந்த சமூகத்தில அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேசுவது இல்லை. இதனால்தான் பல பெண்கள் தங்களோட வாழ்க்கையில் தடம்புரண்டு விடுகிறார்கள். எனவே பெண் குழந்தைகளை சரியாக வழிநடத்தினால் நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

முன்பெல்லாம் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு பெண் சுலபமாக வெளி ஆட்களுடன் பேசிவிட முடியாது. ஆனால், இது செல்போன், கம்ப்யூட்டர் காலம். அதனால தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு யாருடனும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக பேச முடிகிறது.

எனவே முன்பின் தெரியாத நபர்கள் போனில் வந்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துங்கள். செல்போனை காண்பித்து சில்மி‌ஷத்தில் ஈடுபடுவது; ஆபாச படங்களை காண்பித்து பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது என பல வகைகளில் பெண் குழந்தைகள் திசைமாற்றப்படுகின்றனர்.

எனவே, இவற்றில் எல்லாம் உ‌ஷாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். 7-வது, 8-வது படிக்கும் குழந்தைகள் முதல் சொல்லித்தரலாம். சின்ன பெண் தானே அவளுக்கு என்ன தெரியும் என்றோ, இப்ப எதுக்காக இதுப்பற்றி யெல்லாம் சொல்லித் தரவேண்டும் என்றோ நினைக்காதீர்கள்.

எல்லையே இல்லாமல் இ‌ஷ்டத்துக்கு பிள்ளைகளை வளர விடுவது எத்தனை தவறோ, அதே போல்தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் குழந்தையை வலம்வரச் செய்வதும். அதனால், உங்கள் குழந்தைகளை சக நண்பர்களிடம் பேச அனுமதியுங்கள்.

மற்றவர்களிடம் உரையாடும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துக்கூறுங்கள். உதாரணமாக, அடுத்து இருப்பவர்களிடம் பேசும் போது அவர்களின் முகத்தை பார்த்து, நேராக நின்று பேசச் சொல்லுங்கள். குறிப்பாக, ஆண்களிடம் அப்படி இல்லாமல், வெட்கப்பட்டு பேசும்போதோ அல்லது நாணிக் கோணி பேசும் போது, ஏதோ ஒரு விதத்தில் எதிர் இருப்பவர் மனதில் நீங்கள் பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவீர்கள்.

தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்பந்தமான புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பதான் இந்த சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அறிய முடியும். அதனால, செய்தித்தாள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அதோடு, நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதியுங்கள்; அவர்கள் எப்படி இருந்தால் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். நல்வழிக்காட்டுங்கள்.