Home பெண்கள் பெண்குறி பெண்கள் பயன்படுத்தும் காப்பர்-டி பெண்ணுறுப்பில் சரியாக இருக்கிறதா?

பெண்கள் பயன்படுத்தும் காப்பர்-டி பெண்ணுறுப்பில் சரியாக இருக்கிறதா?

542

பெண்ணுப்பு கருத்தடை:பெண்ணுறுப்பில் வைக்கப்பட்ட காப்பர்-டி சரியா இருக்கான்னு எப்படி சரிபார்ப்பது

பெண்களுக்கான கருத்தடை முறைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானவற்றில் பக்கவிளைவுகளும் சேர்ந்தே உள்ளன.

எனவே பாதுகாப்பான மற்றும் நீடித்த பலன்களை வழங்கும் முறையான ஐயுடி எனப்படும் கருத்தடை சாதனத்தை தற்போது பெண்கள் மெதுவாக பயன்படுத்ததுவங்கியுள்ளனர்.

காப்பர்-டி பொதுவாக ஐயுடி என அறியப்படும் கருத்தடை சாதனங்கள், பெண்கள் கர்பமடையாமல் தடுக்க கருப்பையில் செலுத்தப்படும் T வடிவ கருவியாகும். இது மிகவும் பிரபலமடைய காரணம் என்னவெனில், ஒரு முறை செலுத்தப்பட்டால் 12 வருடங்கள் பலனளிக்க வல்லது மற்றும் முழுவதுமாக மீளக் கூடியது. அதாவது, இக்கருவியை நீக்கிய பின்னர் மீண்டும் எளிதாக கர்ப்பம் தரிக்க முடியும்.

பொருத்துதல் இந்த ஐயுடி-யை உள் செலுத்துவது மிகவும் சுலபமான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில காரணங்களால், அவை அதற்கே உரித்தான இடத்திலிருந்து நகரக்கூடிய மற்றும் பெண்ணுறுப்பில் இருந்து வெளியே விழக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இது நிகழக்கூடியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால், உங்களின் ஐயுடி சாதனத்தை அடிக்கடி பரிசோதிக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்குவர். இந்த ஐயுடி சாதனமானது டேம்பன்கள் எனப்படும் உறிபஞ்சுகள் போன்ற ஸ்டிரிங்குகளை கொண்டிருப்பதால், இதை எளிதாக கண்டறியவும், நீக்கவும் முடியும். இந்த ஸ்டிரிங்குகளை பயன்படுத்தி உங்களின் ஐயுடிக்கள் சரியான இடத்தில் உள்ளதா என்பதை கண்டறியமுடியும்.

பரிசோதிப்பது எப்படி? பக்கவிளைவுகள் ஏதுமின்றி கரு உருவாவதை 99.9% திறயையாக தடுப்பதற்கு பெயர்பெற்றது ஐயுடி. ஆனால் அவை திறனுடன் செயல்பட வேண்டுமெனில் சரியான நிலையில் இருக்கவேண்டும். ஒரு சிறப்பு உடசெலுத்தியின் மூலம் கருப்பையின் உள்ளே செலுத்தப்படும் ஐயுடி சாதனம், இயற்கையாகவே சரியான எப்போதும் நிலையில் இருக்க வேண்டும். ஆனால் சிலநேரங்களில் அது நழுவலாம் அல்லது நகரலாம். அதுபோன்ற சமயங்களில், அது சரியான நிலையில் உள்ளதா என்பதை உறுதிசெய்யும் வகையில் ஐயுடி ஸ்டிரிங்குகளை சரிபார்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவர்.

சரிபார்ப்பது எப்படி? 1. சுத்தமான கைகளுடன் துவங்குங்கள் 2. உங்களுக்கு ஏதுவான நிலையில் அல்லது தரையில் குந்தவைத்து அமருங்கள். உங்களின் பெண்ணுறுப்பின் உள்ளே அணுக எது எளிதாக இருக்குமோ அந்த நிலையை தேர்வு செய்யுங்கள். 3. நடு அல்லது ஆள்காட்டி விரலை கருப்பை வாயை தொடும் வரை உள்ளேவிடுங்கள். அது உங்களின் மூக்கின் நுனியை போல இதமாகவும், இரப்பரை போன்ற உணர்வையும் தரும். பெரும்பாலும் ஐயுடி ஸ்டிரிங்குகள் அங்கு தான் இருக்கும். 4. எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால், ஐயுடி சாதனத்தின் நிலை மற்றும் ஸ்டிரிங்குகளின் நீளத்தை நினைவில்கொள்ளுங்கள். அடுத்தமுறை அது சரியான நிலையில் தான் உள்ளது என்பதை உறுதிசெய்ய, முதல்முறை உட்செலுத்திய பின்னர் அதன் நிலையை பரிசோதிப்பது நல்லது.

எவ்வளவு இடைவெளியில் சரிபார்க்க வேண்டும்? ஐயுடி சாதனத்தை உட்செலுத்திய பின்னர், அது இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் சில நாட்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். பொதுவாக உட்செலுத்திய பிறகு குறைந்தபட்சம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை என மூன்று மாதம் வரை சரிபார்க்க வேண்டும். மாதவிலக்கின் போது ஐயுடி நழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் அப்போதும் சரிபார்க்கவேண்டும். துவக்கநிலைக்கு பின்னர், ஒரு குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து சரிபார்க்கலாம்.

ஐயுடி சாதனம் வெளியே விழுமா? உங்களுக்கு தெரியாமல் அது வெளியே விழ முடியாது என நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறு. ஏனெனில் மிகவும் சிறிதான அளவில் இருப்பதால் வெளியே விழும் வாய்ப்புள்ளது. அது உங்களை அறியாமலும் கூட நடக்கலாம். ஐயுடி செலுத்திய பெண்கள் பெரும்பாலும் கர்பமடைந்ததற்கு காரணம், அவர்களை அறியாமலேயே அக்கருவி வெளியே விழுந்தது தான். இந்நிகழ்வு வெளிதள்ளுதல்(Expulsion) எனப்படுகிறது. இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது மருத்துவர்களுக்கும் புரியாமல் இருந்தாலும், பெரும்பாலும் மாதவிலக்கின் போது தான் இது நிகழ்கிறது. எனவே முன்னரே குறிப்பிட்டபடி அடிக்கடி ஐயுடி சாதனத்தை சரிபார்த்துக்கொள்வது நல்லது. ஐயுடி சாதனத்தின் ஸ்டிரிங்குகளை உணர முடியாமலோ அல்லது ஸ்டிரிங்கள் வழக்கத்தைவிட சிறியதாக அல்லது பெரியதாக இருப்பதை போல உணர்ந்தாலோ, அது இடம் மாறியிருக்கலாம்.ஸ்டிரிங்குகளை இடம்காண முடியவில்லை எனில் அவை உங்களை அறியாமல் வெளியேறியிருக்கலாம்.

வெளிதள்ளுதல் அறிகுறிகள்? ஐயுடி சாதனம் உங்கள் பெண்ணுறுப்பின் வழியாக வெளியேறியதை உணர முடியவில்லை என்றாலும், அது வெளியேறியதற்கான அறிகுறிகள் உடலில் தென்படும். அவை பின்வருமாறு. கடுமையான தசைப்பிடிப்பு அசாதாரண வெளியேற்றம் கடுமையான இரத்தப்போக்கு இந்த அறிகுறிகளுடன் காய்ச்சலும் இருந்தால், உங்கள் உடல் நோய்தொற்றுடன் போராடி வருகிறது என அறியலாம்.

வெளியேறினால் என்ன செய்யலாம்? ஐயுடி சாதனத்தின் ஸ்டிரிங்குகளை முழுவதும் உணர முடியாமலோ அல்லது ஸ்டிரிங்கள் வழக்கத்தைவிட சிறியதாக அல்லது பெரியதாக இருப்பதை போல உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் ,நீங்களாகவோ அவற்றை வெளியேற்ற அல்லது நீக்க முயற்சிக்க வேண்டாம். மேலும் பாதுகாப்பற்ற உடலுறவு மேற்கொள்ளும் போது ஐயுடி சாதனத்தின் நிலை மாறினால் அதன் திறன் குறையும் என்பதை நினைவில்வையுங்கள்.