Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களே, இந்த செயல்களால் உங்கள் மார்பகங்கள் பாதிக்கப்படும் என உங்களுக்கு தெரியுமா?

பெண்களே, இந்த செயல்களால் உங்கள் மார்பகங்கள் பாதிக்கப்படும் என உங்களுக்கு தெரியுமா?

42

Captureநாம் அறிந்து செய்யும் செயல்களை விட, நம்மை அறியாமல் செய்யும் சில காரியங்களால் தான் நமது உடல் பாகம் மற்றும் உறுப்புகள் பாதிப்படைய காரணமாக இருக்கின்றன. உணவுப் பழக்கவழக்கங்களில் இருந்து, உடை தேர்வு செய்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது என பலவன இதில் அடங்கும். பெண்கள், செக்ஸியான தோற்றம் அடைய அல்லது வேறு சில காரணங்களுக்காக தங்கள் மார்பகங்களுக்கு செய்யும் சில காரியங்கள் அவர்களுக்கே தெரியாமல் தீங்காக அமைகிறது. இந்த தவறுகளை உள்ளாடை அணிவதில் இருந்து, அவர்களது தாம்பத்திய உறவு வரை பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் செய்கின்றனர்.

வாசனை திரவியம்! வெறும் உடல் மேல், வாசனை திரவியங்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டாம். பெரும்பாலான வாசனை திரவியங்கள் இரசாயனங்களால் தான் தயாரிக்கப்படுகின்றன. மார்பக சருமம் மிகவும் மென்மையானது, இதனால், உண்டாகும் தாக்கம் சரும பிரச்சனைகள் உண்டாக காரணியாக அமையலாம்.

முடிகளை அகற்றுதல்! பெண்களுக்கு மார்பக பகுதியில் முடி முளைப்பது மிகவும் இயல்பு. ஆனால், சிலர் அழகை காரணம் காட்டி, மார்பக பகுதியில் முளைக்கும் முடிகளை அகற்றிக் கொண்டே இருப்பார்கள். இது, இதனால் முடியின் அடர்த்தி அதிகரிப்பது மட்டுமின்றி, வீக்கம் / கட்டி உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

சூரிய குளியல்! சன்பாத் எனும் சூரிய குளியலில் ஈடுபடும் போது அதிக நேரம் சூரிய ஒளி மார்பில் படும்படி இருக்க வேண்டாம் என கூறப்படுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்கள் மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாகலாம். மேலும், இந்த செயல், மார்பக தோல் நெகிழ்வற்ற நிலை அடையலாம்.

சுடுநீர் குளியல்! பாத்டப்பில் குளிக்கும் பெண்கள் அதிக நேர சூடான நீரில் குளிக்க வேண்டாம் என கூறப்படுகிறது,.இது மார்பக பகுதி சருமத்தை வறட்சியடைய செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் மார்பகம் தோல் நெகிழ்வற்ற (Inelastic) நிலையடையலாம்.

சிறிய பிரா அணிதல்! பெண்களில் சிலர் சிறிய பிரா அணிவதால் செக்ஸியான தோற்றம் அளிக்கலாம் என எண்ணுகின்றனர். ஆனால், இது தவறு. இறுக்கமான முறையில் பிரா அணிவதால் இரத்த ஓட்டம் தடைப்படவும், மார்பக பகுதியில் இருக்கும் தசைகளில் பாதிப்பு உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உடல் எடை! திடீரென உடல் எடை அதிகரித்தல், அல்லது சரியான உடற்பயிற்சி செய்யாமல் வெறும் டயட்டால் அதிக உடல் எடையை குறைதல் போன்றவை பெண்கள் மார்பகங்கள் தொங்கும் படியான அல்லது அசௌகரியமான நிலை அடையவோ காரணமாகிவிடும். எனவே, உடல் பருமனாக இருக்கும் பெண்கள் சரியான உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியம்.

வளையம் இடுதல்! மேற்கத்திய நாடுகளில் இந்த பழக்கம் மிகவும் அதிகம் தொப்புள், மார்பகம், பிறப்புறுப்பு போன்ற பகுதிகளில் வளையங்கள் மாட்டிக் கொள்வார்கள். மார்பக பகுதியில் வளையம் மாட்டிக்கொள்ள குத்திக் கொள்வதால், கடுமையான நிமோனியா உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன.

தவிர்க்க வேண்டியவை! தாம்பத்திய உறவு அல்லது சுய இன்பம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மார்பகங்களை வலுமையாக கிள்ளுவது அல்லது குத்துவது போன்ற சம்பவங்கள் மார்பக தசை பகுதியில் கடுமையான தாக்கம் உண்டாக காரணியாக இருக்கிறது. இதை தவிர்த்து கொள்ள வேண்டியது அவசியம்.