Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் மெழுகு சர்மம் பெற நான்கு வகையான வேக்ஸிங்

பெண்களின் மெழுகு சர்மம் பெற நான்கு வகையான வேக்ஸிங்

78

பெண்களின் அழகு குறிப்பு:நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். வேக்ஸின் செய்யும்போது மட்டுமே நிமிடத்திற்குள் முடி நீங்கி அழகான, பொலிவான தோற்றம் தோலிற்கு கிடைக்கிறது. வேக்ஸினை சூடேற்றி உருக வைத்த நிலையில், சருமத்தில் தடவி ஸ்டிரிப் கொண்டு அதன் மேல் ஒட்டி நீக்கும் முறையை வேக்ஸினாக அழகு நிலையங்களில் செய்யப்படுகிறது.

மாத்திரை வடிவிலான வேக்ஸின்களும் சந்தைகளில் கிடைக்கிறது. அதும் உருகும் தன்மை கொண்டதே. சில வகை வாக்ஸின்கள் தோலில் ஒட்டாமல் முடியில் மட்டும் ஒட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டு வரும்.உடலில் இருக்கும் ரோமங்களை நீக்குவது அழகு சார்ந்த விசயமே. முடி இல்லாத கைகளும், கால்களும் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக வழுவழுப்பான தன்மையில் மென்மை தன்மை கொண்ட தோலாக தோற்றம் கொடுக்கும். கூடுதல் பொலிவு சருமத்திற்கு கிடைக்கும். ஒருவித குளிர்ச்சித் தன்மை சருமத்திற்கு கிடைத்துவிடும்.

சில வகையான வேக்ஸின்கள் சருமத்தின் நிறத்தை மாற்றிக்காட்டும் தன்மை கொண்டது. முக்கியமாக முகத்தைப் பொறுத்தவரை வேக்ஸின் பண்ணாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் ஸ்டிரிப் கொண்டு சருமத்தை வேகமாக பிடித்திழுக்கும்போது, முகத்தில் இருக்கும் சருமத்தில் தேவையற்ற பாதிப்புகள் நேரலாம்.

தற்போது அழகு நிலையங்களில் நான்கு வகையான வேக்ஸின்கள் டிரெண்டிங்கில் உள்ளது…

1. கோல்ட்(cold) வேக்ஸ்
2. ஹாட்(hot) வேக்ஸ்
3. ஸாஃப்ட்(soft) வேக்ஸ்
4. ஹார்ட்(hard) வேக்ஸ்

கோல்ட்(cold) வேக்ஸ்

இது உருகிய நிலையிலேயே இருக்கும். சற்றே திக்கான ஆனால், லிக்யூட் வடிவில் காணப்படும். இதனை சருமத்தில் தடவியதும், ஸ்டிக்கர் டைப்பில் ஒட்டி எடுப்பதுபோல் வரும் ஸ்டிரிப் கொண்டு வேக்ஸ் மேல் வைத்து ஒட்டி எடுக்க வேண்டும். ஒரே முறையில் அனைத்து முடியும் நீங்கி விடும். இதில் வலி என்பது குறைவாகவே இருக்கும்.

ஹாட்(hot) வேக்ஸ்

இது க்ரீம் வடிவில் இருக்கும். வாக்ஸின் ஹீட்டரில் இந்தக் க்ரீமை நிறப்பி ஹீட் செய்து ஐஸ் குச்சி வடிவில் இருக்கும் சிப் கொண்டு எடுத்து தடவும் முறை. இதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவி முடிகளை நீக்குதல் வேண்டும்.

ஸாஃப்ட்(soft) வேக்ஸ்

கோல்ட் வேக்ஸ் மாதிரியான ஒரு ஃபீல் இந்த வேக்ஸில் இருக்காது. இது செமி சாலிட் வடிவில் இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த வேக்ஸை ஹீட் பண்ணி கையில் அப்ளை பண்ணிவிட்டு, காடா துணியை வைத்து தேய்த்து இழுப்பார்கள். முடி மொத்தமும் துணியில் ஒட்டிக் கொள்ளும். இப்போது பேப்பர் வடிவிலான ஸ்டிப் பயன்பாட்டில் உள்ளது.

ஹார்ட்(hard) வேக்ஸ்

ஹார்ட் வேக்ஸை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. துணியோ ஸ்டிரிப்போ இதற்குத் தேவையில்லை. ஹார்ட் வேக்ஸினை சிறிது எடுத்து ஹீட் செய்து கையில் தடவி ஆறியதும் திக்கான நிலைக்கு மாறும். பிறகு விரலால் உறித்து எடுத்தல் வேண்டும். மற்ற வேக்ஸைவிட இதில் வலி சற்று குறைவாக இருக்கும். மென்மையான சருமம் கொண்ட பிறப்புறுப்பு பகுதிகளில் இதை பயன்படுத்தலாம். பெரும்பாலும் அழகு நிலையங்களில் ஹீட் செய்து பயன்படுத்தும் வேக்ஸ் களையே அழகுக்கலை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

சருமத்தின் தன்மைக்கு ஏற்ப நிறைய வகைகள் உள்ளது. அதாவது வறண்ட சருமம், சென்சிட்டிவான சருமம், எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு ஏற்ப சுகர் வேக்ஸ், சாக்லெட் வேக்ஸ், க்ரீன் ஆப்பிள் வேக்ஸ், ஸ்ட்ராபெர்ரி வேக்ஸ், ரோஸ் வேக்ஸ், பியர்ல் வேக்ஸ், கோல்ட் வேக்ஸ், ஆலுவேரா வேக்ஸ் என நிறைய ப்ளேவர்ட் வேக்ஸ்கள் சந்தைகளில் கிடைக்கிறது. சிலவகை வேக்ஸ்களில் சருமத்திற்கு பொலிவும் பளபளப்பும் கூடுதலாகக் கிடைக்கும். உங்கள் சருமத்திற்கு எது ஏற்றதோ, எது தேவையோ அந்த வேக்ஸை அழகுக்கலை நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்திக்கொள்ளலாம்