ஏதாவது ஒன்றை தூண்டினாலே ஆண்களுக்கு ஆசை பெருகும். பெண்களுக்கு ஐந்தையும் தூண்டினால் முழுமையாக ஆசை வரும். மனதை ஊக்குவிப்பது, முன் தொடுதலின் முதல் முயற்சி. சூழ்நிலைகள் ரம்மியமாக இருக்க வேண்டும். அமைதியான, உணர்ச்சியை தூண்டும் சூழ்நிலை, உல்லாச உணர்வுகளை தூண்டும். முன் தொடுதல் தொடங்க ஏதுவாகும்.
முன் தொடுதலின் முக்கிய அங்கம் தொடுதல் – ஸ்பரிசம். மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டதாகும். நரம்பு முடிவுகள் ஸ்பரிசத்தால் கட்டழிந்து, உணர்ச்சி வசப்பட்டு, மகிழ்ச்சியை தரும். உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். இவை மார்பகங்கள், உள்ளங்கால், உதடு, நாக்கு, உள்ளங்கை பிறப்புறுப்புகள் (முக்கியமாக க்ளிடோரிஸ், ஆண்குறி) போன்றவை.
முன் தொடுதலுக்கு தேவையானவை
1. உடல், மனது இணைந்த தூண்டுதல்
2. அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும்.
3. நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்