Home பெண்கள் பெண்குறி பெண்களின் பெண்ணுறுப்பு கன்னித்திரை பற்றிய புதிய தகவல்

பெண்களின் பெண்ணுறுப்பு கன்னித்திரை பற்றிய புதிய தகவல்

224

பெண்களின் அந்தரங்கம்:கன்னித்திரை என்பது பெண்ணுறுப்பு திறப்பு பகுதியில் ஒரு மெலிசான தசை என்று குறிப்பிடலாம். இது உடலுறவில் ஈடுபட்டால் தான் கிழிசல் ஏற்படும் என்பதல்ல. உண்மையில், பெண்களை காட்டிலும் ஆண்கள் தான் நமது சமூகத்தில் இதுக்குறித்த தெளிவான உண்மைகளை அறிந்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு எப்போதுமே கற்பின் மீது ஒரு பேரார்வம், பெரும் ஜாக்கிரதை உண்டு. தான் திருமணத்திற்கு முன்னர் எத்தனை உறவில் இருந்தாலும், தனக்கு வாய்க்க போகும் பெண் பத்தினியாக இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இன்றும், இந்தியாவின் பல பகுதிகளில் கன்னித்திரை கிழிசலை வைத்து பெண்களின் கற்பு எடைப்போடபட்டு வருகிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

கன்னிதிரையை மீண்டும் ரீ-கன்ஸ்ட்ரக்ட் செய்துக் கொள்ள முடியும். ஆனால், இது எத்தனை நாள் நீடிக்கும் என்பதற்கு கேரண்டி என்பதை யாராலும் அளிக்க முடியாது. ஜிம்னாஸ்டிக், பளுதூக்கும் பெண்கள், தடகள வீராங்கனைகள் அல்லது மீண்டும் எதிர்பாராத விபத்து காரணமாக அது கிழிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

எனவே, ரீ-கன்ஸ்ட்ரக்ட் என்பது முறையான முழுமையான தீர்வு அல்ல. சரியான முறையா? சரியான முறையா? ரீ-கன்ஸ்ட்ரக்ட் செய்துக் கொள்வது என்பது பெண்களுக்கான ஒரு தீர்வு முறையாக இருப்பினும். அதை எதற்காக செய்துக் கொள்கிறோம் என்பதும் ஒரு கேள்வி. திருமணத்திற்கு முன் தவறான உறவில் இருந்தவர்கள் வருங்கால கணவரிடம் தன் நடத்தையை முறையாக காண்பித்துக் கொள்ள, சந்தேகம் எழாமல் இருக்க இத்தகைய சர்ஜரி செய்துக்க் கொள்கிறார்கள்.

நடுவயது பெண்களும் கூட, தங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்காக இத்தகைய சர்ஜரி செய்துக் கொள்வதாக அறியப்படுகிறது. ஹைமெனோப்ளாஸ்டி! ஹைமெனோப்ளாஸ்டி! ஹைமெனோப்ளாஸ்டி (hymenoplasty) எனப்படும் கன்னித்திரை கிழிசல் ரீ-கன்ஸ்ட்ரக்ட் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய 15,000 முதல் 70,000 வரை செலவாகலாம்.

வெளிப்படையாக பெண்கள் இந்த சர்ஜரி செய்துக் கொள்ள முன்வரும் போதும் சில மருத்துவமனைகள் குறைவாகவும், இரகசியமாக செய்துக் கொள்ள வரும் பெண்களிடம் அதிகமாகவும் பணம் வாங்கப்படுவதாக அறியப்படுகிறது.

முடிந்த வரை… வருங்கால கணவருக்கு சந்தேகம் வந்தால் நடந்த உண்மையை விளக்குங்கள். மற்றும் வேறு எந்தெந்த காரணங்களால் கன்னித்திரை கிழிசல் உண்டாக வாய்ப்புகள் உண்டு என்பதை புரிய வையுங்கள். 33% மட்டுமே பெண்ணுக்கான சரியான உரிமை அல்ல. பெண்கள் இந்த சமூகத்தில் பெறவேண்டிய உரிமைகள் பலவன இருக்கின்றன.

பெண்கள் தகர்க்க வேண்டிய தடைகள், கடினமான சமூக முறைகள், சாடல்கள் நிறைய இருக்கின்றன. அதில் முதலில் தகர்க்க வேண்டியது, கன்னித்திரை கிழிசல் ஏற்பட்டால் அவள் கற்புடையவள் அல்ல என்று கூறும் கூற்றை. முதலில் எதுவாக இருந்தாலும் முழுமையாக அறிந்து, புரிந்து பேச வேண்டியது அவசியம்.