Home பெண்கள் அழகு குறிப்பு நகங்கள் அடிக்கடி உடைவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்!

நகங்கள் அடிக்கடி உடைவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்!

25

நகங்கள் கைகளின் அழகை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. ஆனால் நாம் எமது நகங்களை எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அடிக்கடி உடைந்துவிடுகின்றன. உணவுப் பழக்க மாற்றங்கள் அல்லது போசணைப்பற்றாக்குறை போன்றவை உடலில் காணப்பட்டால், அது நகங்களின் மூலம்தான் வெளிப்படும்.

நகங்கள் அடிக்கடி உடைவதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாம்….

ஒலிவ் எண்ணெயில் தினமும் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வரை நகங்களை நனைத்து எடுங்கள். இதனை தினமும் ஒரு மாதத்திற்கு என செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் உடைவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பாதாம் எண்ணெய்யும் நகங்கள் உடைவதில் இருந்து பாதுகாக்கின்றது. இதில் அதிகளவு ஆன்டி- ஆக்ஸிடண்டுகள் உள்ளன. மேலும் இதில் விட்டமின் E, A, B1,B2 மற்றும் B6 ஆகியவை உள்ளன.
சிறிதளவு பாதாம் எண்ணெய்யுடன், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து நகங்களுக்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பாத்திரம் கழுவும் போதும், தோட்ட வேலைகளை செய்யும் போதும் கை உறை அணிய வேண்டும். பாத்திரம் கழுவும் போது கைகளில் சவர்க்காரம் அல்லது இரசாயன பதார்த்தங்கள் கையில் படுவதில் இருந்து தப்பித்துக்
கொள்ளலாம்.

உங்களது உணவில் தினமும் விட்டமின் A மற்றும் விற்றமின் C யை போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இவை நகங்களைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை ஆகும்.

உங்களது உணவில் அடிக்கடி முட்டை, கோலிபிளவர், முழு தானியங்கள், அவகோடா போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.