உணர்ச்சியின் உச்சத்தினால் தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள். பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றிக் காணலாம்..
எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள்.
காதலனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவனது சட்டை பொத்தானை நோண்டாமல் பெண்களால் இருக்க முடியாது. சில சமயங்களில் மணிக் கணக்காக கூட நொண்டிக் கொண்டே இருப்பார்கள்.
காதலனிடம் “நான் தான் உனக்கு அழகு. நீ என்ன தான் அழகுன்னு சொல்ல வேண்டும்” என நிபந்தனை விடுத்து கூற சொல்வார்கள் பெண்கள்.
அதே போல தாங்கள் தங்கள் காதலனுக்கு பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என பெண்கள் அதிகமாக ஆசைப்படுவார்கள். ஆண்கள் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்காக மீண்டும், மீண்டும் ஏதேனும் செய்துக் கொண்டே இருப்பார்கள்.
காதலர்கள் தன்னை அவர்களது உலகமாக கருத வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும் இருக்கிறது. இதை அடிக்கடி கூற வேண்டும் என விரும்புவார்கள்.
காதலன் தன்னிடம் எத்தனை மணிநேரம் பேசினாலும் பெண்களுக்கு போதாது. போன் வைத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பார்கள். குறைந்தபட்சம் குறுஞ்செய்தி அனுப்பியாவது தூக்கத்தை கெடுப்பார்கள்.
பெண்களுக்கு அவர்களது காதலர்கள் “ஐ லவ் யூ” என்று ஆயிரம் முறைக் கூறினாலும், மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.