Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் உடல் அழகு – சில அழகுக் குறிப்புகள்

பெண்களின் உடல் அழகு – சில அழகுக் குறிப்புகள்

61

பெண்கள் அழகு:உடல் அழகு – சில அழகுக் குறிப்புகள்:

* பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசி வர முகம் பளப்பளக்கும்.

*பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவி வர முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

* ஆரஞ்சு பழ சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி, ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும். இப்படி செய்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

* வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.

* தர்பூசனி பழச்சாறு, பயத்தம்மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.

* தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும். கைகள் மிருதுவாக இருக்கும்.