Home பெண்கள் பெண்குறி பெண்ணுறுப்பை பராமரிப்பது எப்படி??

பெண்ணுறுப்பை பராமரிப்பது எப்படி??

51

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பை விட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. பருவம்டையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இருந்தாலும் எல்லாத்தையுமே அடிப்படையிலிருந்து சொல்லித் தருவதுதானே மரபு.

தூங்கும் போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடாது. பெண்ணுறுப்பு காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்படிப் படுத்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

குளிக்கும் போது பெண்ணுறுப்பில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள். பெண்ணுறுப்பின் மேட்டில் சோப்புப் போடலாம்.ஆனால் உள்ளே கூடாது. சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவ வேண்டும். ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது. குளித்து முடித்தவுடன் பெண்ணுறுப்பில் ஈரமில்லாமல் துடைக்க வேண்டும்.
பெண்ணுறுப்பின் மேலுள்ள முடியை ட்ரிம் செய்யலாம் அல்லது வழித்துவிடலாம். முடி இல்லாமல் இருப்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும்.

பீரியட்சின் போது ஒரு நாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அதோடு பெண்ணுறுப்பை அடிக்கடி கழுவ வேண்டும்.

பெண்ணுறுப்பை இறுக்காத ஜட்டியை அணியுங்கள். ஃபேஷன் என்ற பெயரில் சிறு கோவணத்தை அணிய வேண்டாம். பெண்கள் ஜட்டியை மூன்றுமாதத்தில் மாற்றவேண்டும்.

உடலுறவு முடித்தபின்பும் சுய இன்பம் செய்த பின்பும் பெண்ணுறுப்பை கழுவ வேண்டும். தூங்கும் முன்பு கழுவிவிட்டுத் தூங்குங்கள்.