Home ஆண்கள் தாம்பத்தியத்தில் அதிக இன்பம் கிடைக்க உதவும் அற்புதமான பொருள்..!

தாம்பத்தியத்தில் அதிக இன்பம் கிடைக்க உதவும் அற்புதமான பொருள்..!

55

கருப்பட்டி வெறும் இனிப்புமட்டுமல்ல, அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால் தான் நம் முன்னோர்கள் கருப்பட்டியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

கருப்பட்டியில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக உள்ளது.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் செல்வது குறையும்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு வலி குணமாக கருப்பட்டி சாப்பிடலாம்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமடையும்.

சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்