பொது இடங்களில் பாலூட்டுவது என்பது முரண்பாடான ஒன்று. சில நேரத்தில் குழந்தைக்கு பாலூட்டும் போது எதிர்பாராத விதமாக யாரேனும் வந்து இங்கு அமரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள பகுதி என விளக்கம் தர நேரிடும்.
நீங்கள் வீட்டை விட்டு வெளியில் இருக்கும் போது மறைவான இடம் எது என்று தேடி பாலூட்ட வேண்டும். பெரும்பாலான தாய்மார்களுக்கு வெளியிடங்களில் எப்படி பாலூட்ட முடியும் என்ற கலக்கத்திலேயே வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். சிலர் குழந்தைகளுக்காக பாலை பாட்டிலில் அடைத்து கொண்டு செல்கின்றனர்.
நீங்கள் வெளியிடங்களுக்கு வாகனங்களில் சென்றால் காரில் இருந்தே பாலூட்டலாம். ஏதேனும் வேலைக்காக சென்றிருப்பின் அங்கு உள்ள நிர்வாகிகளிடம் ஏதேனும் தனி அறை இருப்பின் அங்கு சென்று குழந்தைக்கு பாலூட்டலாம். பெரும்பாலான டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் கடைகளில் ந்ர்சிங் அறை என்று தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்று பாலூட்டி வரலாம். பொது இடங்களில் அமர்ந்து பாலூட்டும் போது துணி விலகி இருக்க நேரலாம் அல்லது உங்கள் ஆடை குழந்தையையும் உங்களையும் சரியாக கவராமல் இருக்கலாம்.
தீடீரென பால் அதிகமாக வெளியேறும். அதனால் வெளியிடங்களுக்கு செல்லும் போது ப்ரஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து பாட்டிலில் அடைத்து கொண்டு செல்லலாம். ப்ரஸ்ட் பேடுகளை எடுத்து செல்ல வேண்டும்.
ஏனெனில் பால் அதிகம் சுரக்கும் நேரத்தில் ப்ரஸ்ட் பேடுகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கும், தாய்மார்களுக்கும் ஏற்படும் கூச்சத்தை தவிர்க்கலாம்