Home ஆரோக்கியம் பொது மருத்துவம் தாம்பத்திய பிரச்சனை, நோயிலிருந்து விடுபட நம் முன்னோர்கள் செய்த மசாஜ்

தாம்பத்திய பிரச்சனை, நோயிலிருந்து விடுபட நம் முன்னோர்கள் செய்த மசாஜ்

280

general diseases:எமது வயிற்றுப் பகுதியில் தொப்புளுக்குக் கீழே உள்ள நடுப் பகுதியை அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

இந்தப் புள்ளியை மசாஜ் செய்வதன் மூலம் சமிபாட்டுத் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியில் உள்ள குறைபாடு என்பவற்றை தீர்க்க முடியும்.

இந்தப் புள்ளியிணை ஆங்கிலத்தில் சீஒவ்பிரஷர் என அழைப்பார்கள். ஆம் கடலில் எவ்வளவு நீர் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதைப் போலவே குறித்த புள்ளிக்குள்ள மகத்துவமும் கடலளவு உள்ளதென்பதையே இந்தப் பெயர் குறித்து நிற்கின்றது.

குறித்த பகுதியின் உதவியுடன் நம் முன்னோர்கள் இனப்பெருக்கத் தொகுதியில் உள்ள குறைபாடுகள், மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை, அடிவயிற்றில் தசைப்பிடிப்பு, குடலில் எரிச்சல் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவற்றிற்கு சுலபமாக தீர்வு கண்டார்கள்.

அது சரி, குறித்த பகுதியில் எவ்வாறு மசாஜ் செய்வது என்பது தொடர்பில் நாம் இப்போது பார்ப்போம்.

முதலில் ஆள்காட்டிவிரல், நடுவிரல் மற்றும் மோதிரவிரல் ஆகியவற்றை ஒன்றாக வைத்து தொப்புளுக்கு கீழே தென்படும் சிறு கோடு போன்ற பகுதியில் மெதுவாக அழுத்த வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது திடமான ஒரு பகுதியை உங்களால் உணர முடியும். அப்போது குறித்த பகுதியை அழுத்திக் கொண்டு மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும்.

குறித்த முறையை மேற்கொண்டால் அதிலிருந்து வெளிவரும் சக்தி உடலுறவையும் இனிமையானதாக மாற்றும். இந்த முறையை கையாண்டு நோய் நொடிகளில் இருந்து விடுபடுவோம்