பாலியல் உறவு:தாம்பத்தியத்தின் போது குசு வருமா? என்ற கேள்வி சிலரிடத்தில் எழுலாம். இதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் பொழுது, பொதுவாக பெண்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உள்நுழைத்தலின் பொழுது, ஆணின் பிறப்புறுப்பு பெண்ணின் சிறுநீர் பையில் அழுத்தம் கொடுத்துவிடுவதால் ஏற்படும் உணர்வாக இருக்கலாம் (அ) சில பெண்களில் உச்சக்கட்டம் அடையும் பொழுது ஏற்படும் உணர்வாக இருக்கலாம். ஆனால், உடலுறவு கொள்ளும் பொழுதே சிறுநீர் கழித்துவிட்டால், பெண்கள் தங்கள் பிறப்புறுப்பு தசைகள் பலவீனமாக இருப்பதாய் அறிந்து, அதனை பலப்படுத்த வேண்டும்.
பிறப்புறுப்பு குசு உடலுறவு கொள்ளும் பொழுது பெண்ணின் உடலில் பிறப்புறுப்பு வழியாக நுழையும் காற்று பிறப்புறுப்பு குசுவாக சில சமயங்களில் வெளிப்படுவதுண்டு. இது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றமே இதை பெரிதாக எண்ணிக் கொண்டு பெண்கள், இதைத்தடுக்க பலவித செயல்களில் ஈடுபடுவர். ஆனால் எந்தவொரு தனிப்பட்ட செய்முறையும் செய்யாமலே இந்த பிறப்புறுப்பு குசு உடலை விட்டு நீங்கிவிடும். இதைக்குறித்த கவலையை இனிமேல் விட்டுவிடுங்கள்.