Home பாலியல் முதல் பாலுறவு வாழ்க்கை அனுபவம்

முதல் பாலுறவு வாழ்க்கை அனுபவம்

44

பாலுறவுச் செய்கையில் ஈடுபடுவோர் தாங்கள் படித்த நூலில் இருந்து அறிந்து கொண்ட பாலியல் திறன்களைப் போலன்றி தங்களுடைய திறன் குறைவாக இருப்பதாக உணரும்போது, தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். இது அவர்களின் பாலுறவு வாழ்க்கையை பாதிக்கிறது.

முதன்முதலாக பாலுறவு கொள்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். பெண்ணுக்கு கன்னித்திரை என்ற தடுப்புச் சவ்வு இருப்பதால் பாலுறவின் போது வலியும், திருப்தியின்மையும் உணடாகும். முதலுறவின்போது பயம் ஏற்படுவதால் பிறப்புறுப்பு இறுக்கமாகக் காணப்படும். இவ்வாறாக ஆணுக்கு பாலுறவின்போது விரைப்பின்மை மற்றும் விரைவில் விந்து வெளிப்படுதல் ஆகியவையும் இருக்கும். இதெல்லாம் முதல் பயத்தினால் ஏற்படுபவை. இயல்பானவை என்பது பலருக்கு தெரியாது. இந்த நிலை நாளடைவில் சரியாகி விடும். அவ்வாறு இல்லாமல் தனக்குத் திறனில்லை என்ற எண்ணம் பதியும்போது எப்போதுமே சரியாக செயல்படாத நிலைதான் உண்டாகும்.

பலபெண்கள் பாலுறவின்போது மெய்மறந்து நிலை எனப்படும் உச்ச இன்பத்தை அடைவதே கிடையாது. ஆனால் அவர்கள் கருத்தரிப்பார்கள். இவ்வாறே சில ஆண்களுக்கு பாலுறவு கொள்ளும் போதே விந்து வெளியாகி விடும். இவ்வாறு விந்து சீக்கிரம் வெளியாவது தனது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறி என்பதை அறிந்திடாமல், நீண்ட நேரம் பாலுறவு கொண்டிருப்பதால் ஆண்மை என கருதும்போக்கு இருக்கிறது. ஆணும், பெண்ணும் பாலுறவு கொள்ள இரண்டு நிமிடம் போதுமானது என ஆய்வுகள் கூறுகின்றன. அவசரப் படாமல் பாலுறவு கொள்வோர், தங்கள் மணவாழ்க்கை முழுவதிலும் திருப்தியாக இருக்கிறார்கள்.