பெண்கள் அணைப்பு:’முத்தம்’ – நீங்கள் குழந்தையாயிருந்த போது, அம்மா, பாட்டி, அத்தை என்று அத்தனை பேரும் முத்தம் கொடுத்துவிட்டு, “ஒரே ஒரு உம்மா கொடு,” என்று கொஞ்சியிருப்பார்கள். அவை எல்லாம் பாசத்தின் வெளிப்பாடான முத்தங்கள். முத்தம் மொத்தமுமே இனிப்பானதுதான் என்றாலும், காதலின் வெளிப்பாடான முத்தம் முற்றிலும் வேறுவகையை சேர்ந்தது. கிளுகிளுப்பான முத்தம் அது!
கேர்ள் ஃப்ரண்ட் என்றால், ‘முத்தம் வழங்காமல் இரத்தம் அடங்காது,’ என்று சும்மா முரட்டுத்தனமாய் கட்டிப்பிடித்து முத்தமிட முயற்சித்து விடக்கூடாது. அதற்கு ஒரு முறை இருக்கிறது. இது அறிவியல் சார்ந்ததும்கூட. முத்தத்தை முன்னெடுக்க இதோ சில வழிமுறைகள்…
ஏற்ற சூழ்நிலை உங்கள் உள்ளத்தின் ராணியை முத்தமிட ஏற்ற சூழ்நிலையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் முத்தம் பரிமாறுவதற்கேற்ற மனநிலை உருவாகும். இயல்பான மனநிலையில் முத்தம் பிறக்க வேண்டும். சூரிய உதயம் அல்லது அஸ்தமனம் போன்று கொஞ்சம் வித்தியாசமான பின்னணி நல்லது. சுற்றிலும் ஆள் அரவமற்ற அமைதியான சூழல் முதல் முத்தத்தை பதிக்க ஏதுவானது. யாருமற்ற ஏகாந்தம், முத்தத்தை பகிர்ந்து கொள்ள இருவரும் தயாராக போதிய நெருக்கத்தையும், நேரத்தையும் தரும். வெளியே எங்கும் சூழல் சரியாக வாய்க்காவிட்டாலும் பரவாயில்லை, இருவரில் யாராவது ஒருவரின் இல்லத்தில், சரியான வேளையை இந்த உணர்ச்சிகரமான நிகழ்வுக்கு தேர்ந்தெடுக்கலாம்.
கரம் பற்றுங்கள் உங்களவளுக்கு முத்தம் கொடுக்க ஆயத்தமாகும்போது, மெதுவாக அவளது கரத்தைப் பற்றுங்கள். நீங்கள் கையைப் பிடிக்கும் விதம், நீங்கள் நெருங்குவதை உணர்த்துவதோடு, உடல்ரீதியான தொடர்பின் அடுத்த கட்டத்திற்கு, அதாவது முத்தத்திற்கு உங்கள் இணையை தயாராக்கும்.
வார்த்தை வலை இந்த கட்டத்தில் இதயம் கொஞ்சம் ‘லப் டப்’ என்று துடிக்கத்தான் செய்யும். இதயம் துடிப்பின் அதிர்வை உணரக்கூடிய தருணம் இது. இது வார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டிய வேளை. ‘மானே, தேனே’என்றெல்லாம் நீங்கள் வர்ணிக்கலாம். ஆனால், சூழ்நிலையை உங்கள் இணை கையாளும்படி விட்டுக்கொடுங்கள். எதற்கும் வற்புறுத்தாதீர்கள். மெல்லமெல்ல பழம் நழுவி பாலில் விழட்டும். அதுவரை வார்த்தைகளால் வசப்படுத்துங்கள்.
தூண்டலும் துலங்கலும் நீங்கள், உங்கள் தோழியின் கரத்தைப் பற்றும்போது, அவளிடம் தோன்றும் எதிர்வினையை கவனியுங்கள். உங்கள் நெருக்கத்தை தவிர்க்காத நிலையில், “என்னோடு தனியே இருக்கும்போது நீ சந்தோஷமாக இருக்கிறாய்,” என்று பேச்சை கொண்டு போங்கள். உண்மையில் அப்பெண்ணுக்கு உங்கள்மேல் ஈர்ப்பு வந்து விட்டால், கைகளால் உங்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு அதை வெளிப்படுத்தக்கூடும்.
கண்ணும் கண்ணும்… முத்தத்திற்கு முந்தைய முக்கிய கட்டம் எது தெரியுமா? உங்கள் தோழியின் கண்களை நேராய் நோக்குவதுதான். ‘உன்னிடம் மயங்குகிறேன்… உள்ளத்தால் நெருங்குகிறேன்’ என்பதனை தோழியின் கண்களை நேராய்ப் பார்ப்பதன் மூலமாக எளிதாக, சரியான விதத்த்தில் தெரிவிக்க முடியும். இருவரும் ஒருவரையொருவர் கண்களுக்குள் நோக்கும் இந்தத் தருணமே, ஒருவர்பேரில் ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பினை, அக்கறையை, உரிமையை காட்டும். உண்மையில் அடுத்து நிகழப்போவதை எண்ணி பரவசப்படும் தருணம் இது.
அங்கல்ல… எங்காவது… அவளை முத்தமிட்டு விட வேண்டும்! இதுதான் நோக்கம். அதற்காக, காஞ்சமாடு கம்பங்கொல்லையில் விழுந்ததுபோன்று, உதட்டிற்கு நேராய் பாய்ந்துவிடாதீர்கள். மெதுவாக, அவள் கரத்தில் முத்தம் பதிக்கலாம் அல்லது உதடு தவிர வேறு ஏதாவது இடத்தில் முத்தம் கொடுக்கலாம். ஆரம்ப தயக்கத்தை தாண்டிச்செல்ல இது உதவும். உன்மீது எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. ஆனாலும் நான் அலையவில்லை என்று அவளுக்கு உணர்த்த உதவும் தருணம் இது.
மெதுவாக… பதமாக… தேவதையின் இதழில் முத்தம் பதிக்க எது முக்கியம் தெரியுமா? பறக்காமல் இருப்பதுதான். பதறிய காரியம் சிதறிப்போகும். ஆகவே, மெதுவாக தேவதையின் தலை அருகே நெருங்குங்கள். அடுத்தக் கட்டத்திற்கு அவளையே வழிநடத்த விடுங்கள். முத்தத்திற்கு அவள் ஆயத்தப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
மென்மையான இதழ்களில்… உங்கள் தேவதையின் இதழ்கள் மிருதுவானவை. ஆகவே, முத்தமிடும்போது ரொம்ப விறைப்பாக இருக்க வேண்டாம். உங்கள் உதடுகளை அழுத்தமாக அல்ல, மிருதுவாக அந்த ரோஜா இதழ்களில் பதியுங்கள். இதழ்களை இறுக்கமாக மூடிக்கொள்ளாதீர்கள். இதழ்களை தாண்டிச் செல்தல் இன்பத்தின் பெருக்காக அமையக்கூடும்.
முதல் முத்தமும் உங்கள் கைகளும் முதல் முத்தத்திற்கான கடைசி குறிப்பு என்ன தெரியுமா? முத்தமிடும்போது கைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். உங்கள் தேவதையை முதன்முறையாக முத்தமிடும்போது, உங்கள் கைகள் அவள் முதுகை சுற்றி அணைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது தோள்களை சுற்றி படர்ந்திருக்கலாம். இல்லையெனில், அவள் முகத்தை இருபக்கமும் ஏந்தி இருக்கலாம். இவை எல்லாமே முரட்டுத்தனமாக அல்ல;