Home அந்தரங்கம் முதல்முறை உறவுகொள்ள போகும் முன் இப்படியெல்லாம் தான் தயார் செய்துகொள்ள வேண்டுமாம்…

முதல்முறை உறவுகொள்ள போகும் முன் இப்படியெல்லாம் தான் தயார் செய்துகொள்ள வேண்டுமாம்…

47

உடலுறவு என்பது கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் நிறைந்த விஷயம். உடலுறவில் எந்த அனுபவமும் இல்லாதவர்கள் அதற்காக எப்போது வரும், எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தோடு இருக்கலாமே தவிர, என்ன ஆகும்? என்ற பயத்தை முதலில் விட்டுவிட வேண்டும்.

பயத்தைக் களைந்துவிட்டு, எப்படி முதல் முறை உடலுறவுக்குத் தயாராக வேண்டும்? அதற்காக மனதளவில் சிறுசிறு விஷயங்களில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டாலே போதும்.

ஆண், பெண் இரண்டு பேருக்கும் சௌகரியமான நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நீங்களும் உங்கள் பாட்னரும் முதலில் தயாராக வேண்டும். இருவருக்கும் எந்தவிதமான மன அழுத்தமும் இருக்கக்கூடாது.

முதல் முறை உறவில் ஈடுபடும் போது பாதுகாப்பு மிகமிக அவசியமான ஒன்று. அதனால் தேவையில்லாத கர்ப்பத்தைத் தவிர்க்க முடியும்.

ஆணுறை, கருத்தரிப்பு மாத்திரைகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களுக்கு எது வசதியோ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்கள் ஆணுறை வாங்கி வைத்திருப்பார்கள் என்று உங்கள் துணையை நம்பிக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் உங்கள் வசம் ஆணுறைகளை வாங்கி வைத்திருப்பது நல்லது.

இந்தியாவில் பெரும்பாலானோர் பெண் கன்னித்தன்மையடன் இருக்கிறாள் என்பதை முதல் முறை உறவின் போது வெளிப்படும் ரத்தத்தை வைத்தே முடிவு செய்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை.

எல்லா பெண்களுக்கும் இதுபோல் ரத்தப்போக்கு உண்டாவதில்லை. பெண்கள் ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல். குதித்தல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும்போது கூட கன்னித்திரை கிழிந்துவிடும். அதனால் முதல்முறை உண்டாகும் ரத்தப்போக்குக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது.

முதல் முறை உறவு கொள்ளும்போது வலி உண்டாவது இயல்பு தான். அதற்காக பெரிதாகக் கவலையோ தேவையில்லாத பயமோ கொண்டிருக்கத் தேவையில்லை. கொஞ்ச நேரத்திலேயே வலி குறைந்து சுகமாக உணர ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் எதற்கும் பதட்டப்படாமல் ரிலாக்ஸாக இருக்கப் பழகுங்கள்.

பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். பிறப்புறுப்பு வறட்சியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும்.

முதல் முறை உறவு கொள்வதற்கு முன் எதிர்பார்ப்டன் இருங்கள். பதட்டத்தையும் பயத்தையும் முதலில் குறைக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் முறையாக, கவனத்தில் கொண்டாலே முதல் முறை உடலுறவை நீங்கள் கொண்டாட முடியும். உங்கள் துணையை உங்கள் மீது கிளர்ச்சி கொள்ளச் செய்ய முடியும்.