Home காமசூத்ரா திருமணத்தின் முதலிரவு பற்றி சில நம்பிக்கைகளும் உண்மையும்!

திருமணத்தின் முதலிரவு பற்றி சில நம்பிக்கைகளும் உண்மையும்!

117

திருமணநாளன்று இரவு புதுமணத்தம்பதியர்களுக்கு எதிர்பார்ப்பும், பதற்றமும் இருக்கும். நண்பர்களின் அறிவுரையும் அவர்களின் ஆவலை அதிகப்படுத்தியிருக்கும். வலி, ரத்தம் போன்றவை சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்திவிடும். புதிதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் இளைய தலைமுறையினருக்கு முதல்நாள் இரவு குறித்த சில நம்பிக்கைகளையும், உண்மைகளையும் கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

திருமணநாளில் சில சடங்குகள் தவிர்க்க முடியாதது. அதனால் புதுமணத்தம்பதியர்களுக்கு அலைச்சலும், உடல்சோர்வும் ஏற்படும் இயல்பு. தனி அறையில் முதல் முதலாய் தனிமையில் சந்திப்பதால் பதற்றம் வேறு ஏற்படும். இந்த சூழ்நிலையில் நண்பர்கள் கூறியுள்ளதைக் கேட்டு நமக்கு அதுபோல நடக்கலையே. நாம் தப்பாக எதுவும் செய்கிறோமோ என்று எண்ணிவிடவேண்டாம். சில விசயங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நடக்காது என்கின்றனர் நிபுணர்கள்.

கன்னித்திரை கிழிதல்
முதல்நாள் இரவில் பெண்களுக்கு கன்னித்திரை கிழிந்து ரத்தம் வரவேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பெண் எந்தத்தவறும் செய்யாமல் கன்னிப்பெண்ணாக இருக்கிறார் என்று அர்த்தம் என்று கூறியிருப்பார்கள். இது நம்பிக்கைதான். இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் பெரும்பாலான கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். விளையாட்டு வீராங்கனைகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் உடல்ரீதியான கடினமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு கன்னித்திரை கிழிந்து விடும். எனவே இவர்களுக்கு முதல்நாள் செக்ஸ் அனுபவத்தில் ரத்தம் வர வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

வலி அதிகமிருக்கும்
முதன்முதலாக தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் கன்னித்திரை கிழிவதால் அந்த வலி ஏற்படும். ஆனால் சிலருக்கு வலி ஏற்படுவதில்லை. இதனால் சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. எனவே சைக்கிள் ஓட்டுதல், குதிரை ஏற்றம், மற்றும் கடினமான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு கன்னித்திரை கிழிந்து இருக்கும் என்பதால் அவர்களால் குறைந்த அளவு மட்டுமே வலியை உணரமுடியும். எனவே தேவையற்ற சந்தேகங்களை மனதில் கொள்ள வேண்டியதில்லை என்கின்றனர் நிபுணர்கள். முதல்நாள் இரவில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமாக அனுபவியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

பிறப்புறுப்பில் காயம்
முதல் இரவு அனுபவித்தினால் பெண்களின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு எரிச்சல் உண்டாகும். எனவே பிறப்புறுப்பில் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தை உருவாக்கிவிடும். எனவே சில நாட்களுக்கு வலி ஏற்படுவது இயல்புதான். எனவே பிறப்புறுப்பில் வலி, வறட்சி ஏற்பட்டுள்ளவர்கள் சரியான மருத்துவர்களை அணுகுவதன் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

கர்ப்பத்தை தடுக்கலாம்

முதல் இரவில் யாரும் கர்ப்பமடைவதைப் பற்றி நினைக்கமாட்டார்கள். அன்றைய தினம் காண்டம் உபயோகிப்பதைப் பற்றி யோசிக்கவும் மாட்டார்கள். எனவே முதல்நாள் இரவில் தம்பதியரிடையே உறவு முடிந்த உடனே சிறுநீர் கழித்து விட்டாலோ, பிறப்புறுப்பை சுத்தம் செய்து விட்டாலோ கர்ப்பமடையமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அது தவறான கருத்து என்கின்றனர் நிபுணர்கள். செக்ஸ் முடிந்த உடன் சிறுநீர் கழிப்பதற்கும் கர்பத்தை தடுப்பதற்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்