Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பத்திற்கான முதல் அடையாளங்கள்

கர்ப்பத்திற்கான முதல் அடையாளங்கள்

28

கர்ப்பத்திற்கான முதல் அடையாளங்கள் :

இந்த அடையாளங்களில் உங்களுக்கு அனைத்தும் அல்லது சில தென்படலாம் . அல்லது எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கலம்.

1. மார்பகங்கள் மிருதுவாகவும் சற்று பெரிதாகவும் காணப்படும். தொடும் போது வலி இருக்கும். மார்பு காம்புகள் கருமை அடைந்து காணப்படலாம். ரத்த நாளங்கள் பிரசித்தமாக தெரியலாம்.

2. யோனிக்குழாய் கசிவு(vaginal discharge) அதிகரித்து காணப்படலாம்

3. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படலாம்

4. முதலில் பிடித்த சுவைகள் இப்பொழுது பிடிக்காமல் போகலாம். புளிப்பு போன்ற சில சுவைகளில் பிடித்தம் அதிகரிக்கலாம். வாயில் ஒரு விதமான உலோக சுவை இருக்கலாம்.

5. அடிவயற்றில் சிறிது வலி ஏற்படலாம்

6. சிலருக்கு கர்ப்பம் தரித்து இருந்தாலும் சிறிய அளவில் உதிர போக்கு காணப்படலாம்.

7. உடல் சோர்வு காணப்படலாம். தலை சுற்றல் இருக்கலாம். எப்பொழுதும் போல் இல்லாமல் அதிக உணர்ச்சிவசப்பட்டு காணப்படலாம்.

8. கர்ப்பம் தரித்த சில நாட்களிலேயே குமட்டல், அருவெறுப்பு, வாந்தி போன்றவை ஏற்படலாம். இவை பரவலாக காணப்பட்டாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி ஆகா இருந்தால் கற்ப காலம் முழுவதுமே இவை போன்ற கஷ்டங்கள் இல்லாமலே போகலாம்.

9. மாதவிடாய் தவறிப் போதல். இது கர்ப்பதிற்கு மிக பலமான அடையாளமாகும். ஆனால் மாதவிடாய் தவறி போக வேறு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக அதிக வேலை பளு, உடல் நலமின்மை, மனக்கவலை, அதீத ஆவலுடன் கர்ப்பத்தை எதிர்பார்த்து இருத்தல், வழக்கமாகவே ஒழுங்கில்லாத மாதவிடாய் போன்றவைகளால் மாதவிடாய் தவறி போகலாம்.

10. வீட்டில் செய்ய கூடிய கர்ப்ப சோதனையில்( home Pregnancy டெஸ்ட்) சாதகமான முடிவு காணப்பட்டால் அதை மிக மிக பலமான அடையாளமாக கொள்ளலாம்.