படுக்கை அறையில் ஆடையின்றி உறங்கினால் தம்பதியரிடையே மகிழ்ச்சி அதிகமாகும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த 1004 தம்பதிகளிடம் அமெரிக்காவின் காட்டன் அமெரிக்கா என்ற அமைப்பு இது தொடர்பான வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது எவ்வாறு தூங்குகிறார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டனர்
நிர்வண உறக்கம்
இரவு நேரத்தில் படுக்கையில் ஆடையின்றி நிர்வாணமாக உறங்குவதையே 57 சதவிகித தம்பதிகள் விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
உறவு பிணைப்பு அதிகமாகும்
நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள் பகிரப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
வசதியான உடைகள்
பைஜாமா போன்ற உடைகளை அணிந்து தூங்குவதாக 48 சதவீத தம்பதிகள் கருத்து கூறியுள்ளனர். இதுவே தங்களுக்கு வசதியான உடையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நைட்டீஸ்
இரவு உடைகளை அணிந்து உறங்குவதே தங்களுக்கு வசதி என்று 43 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
என்ன சம்பந்தம்
உடைக்கும் தங்களுடைய உறவு மேம்படுவதற்கும் சம்மந்தமில்லை என்று 15 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அது மனம் சம்மந்தப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நெருக்கம் அதிகமாகும்
உங்கள் துணையுடன் நீங்கள் படுக்கையில் ஆடையின்றி படுப்பது உங்களுக்குள் உடல் மற்றும் உணர்வு ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மன்ஹட்டனை சேர்ந்த உறவு மற்றும் சிகிச்சை நிபுணர் அம்பர் மடிசன் கூறியுள்ளார்.
உறவுக்கு பச்சைக் கொடி
நான் உனக்கு நெருக்கமாக இருக்கிறேன் எனவும் தாம்பத்ய உறவுக்கு அது பச்சை கொடி காட்டுவது போன்றது என்கிறார் நிபுணர் மடிசன்
உறவு வலுப்படும்
இப்போது உள்ள சவாலான வாழக்கை சூழ்நிலையில் இது போன்ற செயல்கள் தம்பதியரிடையே நெருக்கமும் வலுவான உறவும் ஏற்பட தேவை எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.