உலகம் முழுவதும் 72 சதவிகிதம் பேர் செக்ஸ் அடிமைகள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரி வித்துள்ளது. எதுவுமே சராச ரியாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஓர ளவிற்குமேல் போய், சதாசர்வ கால மும் அதைப்பற்றிய நினைவாகவே இருப்பவர்கள்தான் அடிமைகளாக மாறுகின்றனர்.
மது, போதை, சிகரெட், இண்டர்நெட் பழக்கங்களுக்கு அடி மையானவர்களைப்போல
செக்ஸ்சிற்கு அடிமையானவர்க ளுக்கு என்று சில சிகிச்சைகள் இருக் கின்றன.செக்ஸ் அடிமைகளை கண்ட றிவது எப்படி? அதிலிருந்து மீள்வது எப்படி என்று நிபுணர்கள் அறிவுறுத்தி யுள்ளனர் படியுங்களேன்.
சிறு வயதில் பாலியல் ரீதியான துன்பு றுத்தலுக்கு ஆளாகும் பெண்களே பெ ரும்பாலும் அடிமைகளாக மாறுகின்ற னர் என்கிறது ஒரு ஆய்வு. மற்றவரிடம் சொல்ல பயந்து, அதைத் தனக்குள்ளே யே ரகசியமாகப்பாதுகாக்கிற பெண்கள், பின்னாளில் அதீத செக்ஸ் ஆர்வமுள்ளவர்க ளாக மாறுகிறார்கள் என் கின்றனர் ஆய்வாளர்கள்.
செக்ஸ்அடிமை எனில் எ திலும் ஒரு நிதானம் இரு க்காது. குடும்பம், வேலை , குழந்தைகள், நட்பு என எல்லாவற்றிலும் விட்டே த்தியான ஒட்டுதலுடன் இருப்பார்கள். பொழுதுபோக்கு, போ ன்ற மிகப்பிடித்த பல விஷயங் களிலிருந்து கூட வில கியே இருப்பார்கள்.
அடிக்கடி படபடப்பு, சோர்வு, மன உளைச் சல், டென்ஷன், பொறுமையின்மை போ ன்றவை ஏற்படும் என்கின்றனர் நிபுணர் கள்.
அதீத செக்ஸ் ஆர்வமுள்ள பெண்கள் அத ற்கு வடிகாலாகத் தேர்ந்தெடுக்கும் முதல் ஆயுதம் சுயஇன்பம். ஆபாசப் படங்களை ப் பார்ப்பது, புகைப் படங்களை ரசிப்பது என ஆண்கள் நாடும் விஷயங்கள் இவர்க ளை ஈர்ப்பதில்லை. 60 சதவிகிதப் பெண்க ளுக்கு வாரத்துக்கு இரண்டு முதல் நான்கு முறை சுய இன்பம் காண்கிற பழக்கம் இருப்பதாகவும் மேற்சொன்ன ஆராய்ச்சி தெரிவிக்கிறது. சுய இன்பப் பழக்கம் அளவை மிஞ்சும்போது வேறு விதங்க ளில் தன் விளைவுகளைக் காட்டி விடு ம் என்கின்றனர் நிபுணர்கள்.
செக்ஸ் அடிமைத்தனத்திற்கு மூல காரணமாக இருப்பது மனதுதான். என வே முதலில் சிகிச்சை தரவேண்டியது மனதுக்கு. செக்ஸ் ஆர்வம் உங்களை க் கட்டுப்பாட்டை இழக்கச்செய்வதாக உணரும்போது யோகா, தியானம் முத லியவற்றில் ஈடுபடுங்கள். இந்த பயிற்சிகள் உங்களை மாற் றும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். உடற்பயிற்சி செய் யுங்கள். ஜாகிங் இப்பிரச்சினைக்கா ன மிக அருமையான பயிற்சி என்கி றார்கள் அனுபவஸ்தர்கள்.
செக்ஸ் எண்ணங்கள் மனதில் இருந் து வெளியேறும் வரை ஆண்-பெண் சந்திப்புகள் அதிகம் இருக்கிற இடங் களுக்குச் செல்வதைத் தவிருங்கள். இன்டர்நெட் உபயோகிக் கிற, பிரவுஸ் செய்கிற பழக்கமிருந்தால், தற்காலிகமாக நிறு த்துங்கள் அது உங்களுக்கு கூடு தல் நன்மையை தரும்.
முடிந்தவரை உங்களை பிஸியா க வைத்திருங்கள். மனசுக்கு வே லையில்லாமல் போகிற போது தான் இப்படிப்பட்ட விஷயங்க ளைப்பற்றி சிந்திக்கிறது. செக்ஸ் ஆர்வம் தலைதூக்கும் போதும், சுய இன்பம் செய்ய நினைக்கிற போதும் சட்டென மனத்தை உங்களுக்குப் பிடித்த வேறு விஷயத்தில் திருப்புங் கள் இதன்மூலம் படிப்படியாக அடி மை த்தனத்தில் இருந்து மீளமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.