உணர்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையே உள்ளது. அதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டுபவையா பெண்களின் உள்ளாடைகள்?
உடலை அழகாகக் காட்டுவதற்கு… சுத்தமாக, பளிச்செனக் காட்டுவதற்கு… அடக்கமும் கண்ணியமும் கொண்டவர்களாக தெரிவதற்கு என மூன்று காரணங்களுக்காக உள்ளாடைகளை பெண்கள் பயன்படுத்தினார்கள்.
அமெரிக்காவில் பிரபலமடைந்த லாஞ்சரி(Lingerie), இப்போது இந்தியாவிலும் வலம் வரத் தொடங்கிவிட்டது. கவர்ச்சி யான உள்ளாடைகளில் மனைவியைப் பார்ப்பதை பல கணவர்கள் விரும்பத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இதனால் ஒரு ஃபேன்டஸியும் செக்ஸுக்கான அகத்தூண்டலும் கிடைக்கிறது.
பொதுவாக ஆணுக்கு, அழகான பெண்ணை பார்த்தவுடனேயே பாலியல் தூண்டுதல் கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு அப்படியல்ல… மனம் ஓர் ஆணை விரும்பினால்தான் செக்ஸுக்கான அகத்தூண்டுதல் பெண்ணுக்குக் கிடைக்கும். ஒரே வித உடைகளில் மனைவியைப் பார்க்கும் ஆண்களுக்கு காலப்போக்கில் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டுவிடும். அந்த சலிப்பை விரட்ட, கவர லாஞ்சரி பெண்களுக்கு உதவும்.
இது நவீன யுகம்… பெண்கள், ஆண்களுக்கு இணையாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்… பல துறைகளில் பிரகாசிக்கிறார்கள்… எல்லாவற்றையும் அறிந்தும் வைத்திருக்கிறார்கள். மனைவி படுக்கையறைக்குள் லாஞ்சரி அணிந்து வருகிறாரா? கணவனிடம் உறவுக்கு ‘ஓ.கே.’ சொல்கிறார் என்று அர்த்தம். பெண்கள் லாஞ்சரியை தாராளமாக அணியலாம்.
அதே நேரத்தில், வெறும் உள்ளாடை சார்ந்து மட்டும் கவர்ச்சி அமையாது என்பதையும் நினைவில் கொள்ளவும். பெண்களின் உடலமைப்பில்தான் கவர்ச்சி இருக்கிறது. எனவே, பெண்கள் கணவனைக் கவரும் விதமாக உடலழகைப் பராமரிப்பது அவசியம். ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.
‘கவர்ச்சியான உள்ளாடைகளோடு பார்ப்பதால் மட்டுமே மனைவி மீது செக்ஸ் ஈர்ப்பு வருகிறது’ என்று ஒருவர் சொல்கிறாரா? அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்னை இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.